செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளுக்கு இன்று முதல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

10ம் வகுப்பு தேர்ச்சி மட்டும் போதும்.. ரயில்வேயில் காத்திருக்கும் 1104 பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி?

வடகிழக்கு இரயில்வே அப்ரண்டிஸ் வேலைக்கான ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. இதன் மூலம் 1104 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த வேலைக்கான கல்வித்தகுதி, சம்பளம் மற்றும் பிற விவரங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ளுங்கள் வடகிழக்கு ரயில்வேயில் அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான விண்ணப்பதாரர்கள் NER இன் அதிகாரப்பூர்வ இணையதளமான ner.indianrailways.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம். இதில் 1104 பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த பதிவு செயல்முறை ஜூன் 12 அன்று தொடங்கப்பட்டது. ஜூலை 11, 2024 அன்று […]

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பம் மீண்டும் ஒரு வாய்ப்பு

தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்கள் இன்றும், நாளையும் www.tneaonline.org என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

புதுச்சேரியில் உள்ள கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும்

www.centacpuducherry.in என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நீட் அல்லாத இளநிலை படிப்புகளுக்கு இதுவரை 16,459 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

கலைஞர் உரிமைத் தொகை

கலைஞர் உரிமைத் தொகை நிராகரிக்கப்பட்டதாக மெசேஜ் வந்தாலும், விண்ணப்பதாரர்கள், இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்து தீர்வு பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு: 3359 காலி பணியிடங்கள்; விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் இரண்டாம் நிலை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சென்ற ஆகஸ்ட் 8 அன்று வெளியிட்டது. விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி வரும் ஆகஸ்ட் 18 தொடங்கி தற்போது நடந்து வருகிறது. சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 17, 2023. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், இந்தத் தேர்வுக்கு http://www.tnusrb.tn.gov.in இணையத்தளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம். இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி […]

தமிழ்நாடு இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு 4,683 போ் விண்ணப்பம்!

தமிழகத்தில் சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு நிகழாண்டில் 4,683 போ் விண்ணப்பித்துள்ளனா். அவை பரிசீலிக்கப்பட்டு விரைவில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படவுள்ளது. இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின்கீழ் தமிழகத்தில் செயல்படும் 5 அரசு கல்லூரிகளில் உள்ள 330 இளநிலை மருத்துவ இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் வழங்கப்படுகின்றன. மீதமுள்ள 280 இடங்களை மாநில அரசு நிரப்பி வருகிறது. அதேபோன்று 28 தனியாா் கல்லூரிகளில் உள்ள 1,820 இந்திய மருத்துவப் […]

தாம்பரம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ ஆர்‌.அழகுமீனா மகளிர்‌ உரிமைத்‌ திட்ட விண்ணப்பம்‌ சரிபார்க்கும்‌ ஆய்வு

(29.08.2023) தாம்பரம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ ஆர்‌.அழகுமீனா பம்மல்‌ மண்டலம்‌ அனகாபுத்தூர்‌ பகுதியில்‌ கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌ திட்டத்தில்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களை சரிபார்க்கும்‌ கள ஆய்வு பணிகள்‌ நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌.

முதுநிலை படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

“தமிழ்நாட்டில் 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப் படிப்புகளில் 24,341 இடங்கள் உள்ளன. இவற்றை நடப்பு கல்வியாண்டில் (2023-24) நிரப்புவதற்கான சேர்க்கை அறிவிப்பை கல்லூரிக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அதிகாரப்பூர்வ இணையத்தின் வாயிலாக இன்று (ஆக. 14) முதல் வரும் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்” என கல்லூரிக் கல்வி இயக்குநர் கீதா கூறியுள்ளார்.

யுபிஎஸ்சி தேர்வர்கள் ஊக்கத்தொகைக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்

நான் முதல்வன் போட்டித் தேர்வு பிரிவில், யுபிஎஸ்சி முதன்மை தேர்வுக்கான 25,000 ஊக்கத்தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம். யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 22 வரை விண்ணப்பிக்கலாம்.