பொதுச் செயலாளர் தேர்வு விவகாரம்: இபிஎஸ் மனு தள்ளுபடி

அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரி, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நீக்கம்

அ.தி.மு.க.வில் இருந்து அன்வர் ராஜாவை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நீக்கப்பட்டதாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்வர் ராஜா நீக்கப்பட்டுள்ளார். தி.மு.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அ.தி.மு.க.வில் இருந்து அன்வர் ராஜாவை நீக்கம் செய்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தி.மு.க.வில் இணைந்தார் அன்வர் ராஜா

அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான அன்வர் ராஜா தி.மு.க.வில் இணைத்து உள்ளார் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்ததில் இருந்தே அன்வர் ராஜா மனக்கசப்பில் இருந்ததாக தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டில் பா.ஜ.க.வால் காலூன்ற முடியாது என அண்மையில் அன்வர் ராஜா கூறியிருந்தார். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று அவர் தி.மு.க.வில் இணைந்தா

அதிமுக கூட்டணியில் பாமக சேருமா?

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பொதுமக்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடித்து வருகிறது பாமக. அதிமுக கூட்டணியிலும் பாமக நிச்சயம் இடம்பெறும் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார். பாமக கட்சி தற்போது ராமதாஸ் அணி அன்புமணி அணி என 2 அணிகளாக பிரிந்து கிடக்கிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்று பாமக இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

அண்ணா மீது விமர்சனம். – முன்னாள் அதிமுக மந்திரி வருத்தம்

மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் முன்னாள் முதல்வர் அண்ணாவை விமர்சித்ததை தவிர்த்து இருக்கலாம், அது வருத்தமளிக்கிறது என முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். சிவகாசியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரையில் நடைபெற்றதுதான் உண்மையான முருக பக்தர்கள் மாநாடு. ஆட்சியாளர்கள் அனைத்து மத பண்டிகைகளுக்கும் வாழ்த்து தெரிவிக்க வேண்டும். இந்து மத நம்பிக்கைகள் கொண்டோரை புண்படுத்துவதுதான் திமுகவின் வரலாறு. என்று அவர் கூறினார்.

முருகர் மாநாட்டில் அதிமுக தலைவர்கள்

மதுரையில் நடந்த இந்து முன்னணி முருகர் மாநாட்டில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார் கடம்பூர் ராஜு செல்லூர் ராஜு பங்கேற்றனர் இந்த மாநாட்டில் பேசிய அண்ணாமலை எங்கள் வேண்டுகோளை ஏற்று அழைப்பிதழை பெற்ற தலைவர்களின் கட்சி தொண்டர்கள் இந்த மாநாட்டுக்கு வந்துள்ளனர் அவர்களுக்கு நன்றி என்று தெரிவித்தார்

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முக நாதனின் மகன் கைது .

அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜாஇவர் சென்னையில் இருந்து மலேசியாவுக்கு தப்பி ஓட முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளார். கல்குவாரியில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் எனக்கூறி சொந்த சகோதரியிடம் நகைகளை வாங்கி விற்று மோசடி செய்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள ராஜா தூத்துக்குடி மாநகராட்சியின் 59 வது வார்டு கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார்.

அதிமுக பாஜக கூட்டணி ஆட்சியில் எடப்பாடி தான் முதல்வர் – நைனார் நாகேந்திரன் உறுதி

திருவாரூரில் பாஜக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் கட்சியின் தலைவர் நைனார் நாகேந்திரன் கலந்து கொண்டார்.அந்தக் கூட்டத்தில் அவர் பேசும்போது தமிழகத்தில் அடுத்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சியை ஏற்படும். எடப்பாடி முதலமைச்சர் ஆக இருப்பார் என்று தெரிவித்தார்

திருப்பூர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ மரணம்

திருப்பூர் தெற்கு தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏவும், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளருமான குணசேகரன் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.. இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்..

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 50 தொகுயில் பா.ஜ.க. போட்டி

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 50 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என மையக்குழு கூட்டத்தில் அமித்ஷா கூறியுள்ளார்.இதனால் ஐந்து தொகுதியில் பாஜக போட்டியிடும் இன்றைய எதிர்பார்க்கப்படுகிறது