‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசனின் 97வது பிறந்தநாளை ஒட்டி

சென்னையில் உள்ள மணிமண்டபத்தில் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
நடிகர் ரஜினிகாந்த் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

பரிசோதனைக்காக இதய சிகிச்சை நிபுணரிடம் அனுமதி கேட்டிருப்பதாக தகவல் இன்று காலை மருத்துவப் பரிசோதனை நடந்ததாக தகவல் கூலி படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வந்த நிலையில் மருத்துவப் பரிசோதனை சாதாரண பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கவலைப்பட தேவையில்லை என்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தகவல்
விஜய் கட்சி கொடிக்கு சிக்கல் தீர்ந்தது

தமிழக வெற்றிக் கழக கொடியில் யானைகள் இடம்பெற்ற விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடாது….பகுஜன் கட்சி புகாருக்கு தேர்தல் ஆணையம் பதில்… அரசியல் கட்சியில் இடம்பெறும் சின்னங்களுக்கு ஒப்புதலோ, அங்கீகாரமோ அளிப்பதில்லை என்றும் விளக்கம்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்குநடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அலைபேசி மூலம் வாழ்த்து!

தமிழ்நாட்டில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிடமாடல் அரசில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் துணை முதலமைச்சர் பொறுப்பு நேற்று வழங்கப்பட்டது. புதிய துணை முதலமைச்சராகப் பதவி உயர்வு பெற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு அமைச்சர் பெருமக்கள், சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் உள்பட பலரும் நேரில் சந்தித்து, வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் […]
ஆந்திர முன்னாள் மந்திரியும், நடிகையுமான ரோஜா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு கடவுளோடு விளையாடி வருகிறார். அவர் தனது சுய நலனுக்காக எதையும் செய்வார். ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் ஒரு திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. தனது தவறை மறைக்கும் விதமாக லட்டு விவகாரத்தை கையில் எடுத்துள்ளார். கடந்த மார்ச் மாதத்துடன் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக்காலம் முடிந்தது. ஜூலை மாதத்தில் திருப்பதி கோவிலுக்கு நெய் வந்தது. அதில் 4 லாரி நெய் அனுமதிக்கப்பட்டது. அதில் வனஸ்பதி கலந்து இருந்ததால் நிராகரிக்கப்பட்டது. திருப்பதி லட்டு […]
பிரபல நடிகர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் காலமானார்

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ். இவர் ஸ்டார் வார்ஸ் படங்களில் வரும் டார்த் வேடர் என்ற வில்லன் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்ததற்காக மிகவும் அரியப்பட்டவர். மேலும், 90களில் வெளியான லயன் கிங் படங்களில் முபாசா கதாபாத்திரத்திற்கும் ஜேம்ஸ் குரல் கொடுத்திருக்கிறார். இவர் பீல்ட் ஆப் ட்ரீம்ஸ், கோனன் தி பார்பேரியன், கம்மிங் டு அமெரிக்கா மற்றும் பல படங்களில் நடித்தும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இந்நிலையில், நடிகர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் தனது 93-வது வயதில் […]
“தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களின் காலத்தை நாம் கடந்துவிட்டோம் திறமை இருந்தால் வெற்றிப் பெறலாம்” என நடிகர் பரத் தெரிவித்துள்ளார்

சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேபில் நடிகர் பரத், நடிகை அபிராமி, பவித்ரா லட்சுமி, நடிகர் தலைவாசல் விஜய் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள “ஒன்ஸ் அப்பான் ஏ டைம் இன் மெட்ராஸ்” படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் பரத் பேசியதாவது; வாரிசு நடிகர்கள் காலத்தை நாம் தாண்டிவிட்டோம். தமிழ் சினிமாவில் திறமை இருந்தால் வெற்றி பெறலாம். எனக்கு எந்த […]
புதுச்சேரி துணைநிலை ஆளுநருடன் நடிகர் விஜய் சேதுபதி சந்திப்பு!..

புதுச்சேரி : படப்பிடிப்பிற்காக சென்றிருந்த நடிகர் விஜய் சேதுபதி மரியாதை நிமித்தமாகபுதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் உடன் சந்திப்பு
மோசடியில் சிக்கிய நடிகை சனம் ஷெட்டி

டெலிகாம் நிறுவனத்தில் இருந்து தொடர்பு கொள்வதாக கூறி நடிகை சனம் ஷெட்டியிடம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது பற்றி தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ வெளியிட்டு எச்சரிக்கை செய்துள்ளார். அவரது பதிவில், மோசடி அழைப்புகள், ஆன்லைன் மோசடிகளால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். நாம் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தனிப்பட்ட தகவல்களைப் பகிர வேண்டாம். சந்தேகத்திற்கிடமான லிங்க்-களைக் கிளிக் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.
பதவியை ராஜினாமா செய்தார் மோகன்லால்

மலையாள நடிகர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் மோகன்லால். பாலியல் புகார் எதிரொலியாக மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து மோகன்லால் உட்பட 16 நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளனர்.