பா.ஜ.க. கூட்டணிக்குத் தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
முதல்வர் ஸ்டாலின் பதிவு: “தமிழ்நாடு என்டிஏ-வின் துரோகங்களை எண்ணிப் பார்க்கிறது.. தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே… தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் சமக்ர சிக்ஷா கல்வி நிதி எப்போது வரும்?.Delimitation-இல் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைக்கப்படாது என்ற உறுதிமொழி உங்கள் வாயில் இருந்து எப்போது வரும்?.பா.ஜ.க.வின் முகவர்போல் செயல்படும் ஆளுநரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்?.தமிழ்ப்பாசத்தில் தமிழர்களை மிஞ்சியதாய்க் காட்டிக்கொள்ளும் உங்கள் அரசிடம் இருந்து தமிழுக்குரிய […]
உலக பிரச்னைகளுக்கு தீர்வு காணும் மோடி: கே.பி.முனுசாமி புகழாரம்
மதுராந்தகம் தே.ஜ.கூ பொதுக் கூட்டத்தில் பேசிய அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, “2014இல் பிரதமராக பொறுப்பேற்று பின் தங்கிக் கிடந்த இந்திய துணைக் கண்டத்தை இன்று உலகமே வியக்கும் வண்ணம் மாற்றிய தலைவர் பிரதமர் மோடி; உலக பிரச்னைகளுக்கு இந்தியாவில் இருந்து தீர்வு கூறக்கூடிய தலைவராக அவர் இருக்கிறார்”என்று அவர் கூறினார்.
பிரதமர் மோடி இந்த மண்ணில் கால் வைத்ததும் இயற்கையே சூரியனை மறைத்துவிட்டது: எடப்பாடி பழனிசாமி பேச்சு
மதுராந்தகம் பொதுக் கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களை வாட்டி வதைக்கும் ஆட்சி தேவையா? திமுக ஆட்சி கொடுத்தது துன்பம், வேதனை, ஊழல்தான்; வரும் தேர்தல் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும்; இதுதான் திமுகவுக்கு இறுதித்தேர்தல். தேர்தலில் பெரும்பான்மை பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும். வரும் தேர்தலில் 210 இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். முதல்வர் ஸ்டாலின் குடும்பம் உலக அளவில் பணக்கார குடும்பமாக உள்ளது. எந்த […]
தகுதியற்ற அரசு… பூஜ்ய அரசு: அன்புமணி பேச்சு
மதுராந்தகம் கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி திமுக ஆட்சியின் முடிவுக்கு இன்று ஒரு தொடக்கம். ஜீரோ கவர்மென்ட், ஜீரோ கவர்னன்ஸ், இன்னும் 2 மாதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆவார் எடப்பாடி பழனிசாமி. 2047இல் இந்தியாவை வல்லரசாக மாற்ற அழைத்துச் செல்பவர் பிரதமர் மோடி.இவ்வாறு அவர் பேசினார்.
அமமுகவின் ஒவ்வொரு தொண்டனும் தமிழ்நாடு முழுவதும் அயராது பாடுபடுவான்: டிடிவி தினகரன் பேச்சு!
மதுராந்தகம் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக் கூட்ட மேடையில் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், எந்தவித அழுத்தமும் இன்றி அமமுக தே.ஜ. கூட்டணியில் இணைந்துள்ளது. இந்த கூட்டணியின் வெற்றிக்காக அமமுகவின் ஒவ்வொரு தொண்டனும் தமிழ்நாடு முழுவதும் அயராது பாடுபடுவான் என்கின்ற உறுதியை, பிரதமருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் சொல்லி கொள்கிறேன்.(மதுராந்தகம் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் பெயரை டிடிவி தினகரன் கூறியதும் கூட்டத்தினர் ஆரவாரம்.) நாங்கள் எல்லாம் அம்மாவின் தொண்டர்கள் என்பதை எதிரிகள் மறந்துவிட்டார்கள். […]
சூரியன் மறைந்து விட்டது: அண்ணாமலை பேச்சு
மதுராந்தகம் தே.ஜ. கூட்டணி கூட்டத்தில் பேசிய பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, “கொளுத்திக் கொண்டிருந்த சூரியன் மறைந்துவிட்டது. இது மாற்றத்திற்கான கூட்டம், மழை பெய்கிறது, மழையால் தாமரை, இலை மலரும்.”என்று அவர் கூறினார்.
இளைஞர்களை போதைப்பெருள் கும்பலிடம் ஒப்படைத்த திமுக.. ஸ்டாலின் மீது பிரதமர் மோடி கடும் ‛தாக்கு’
நாம் தமிழகத்தை திமுகவிடம் இருந்து விடுவிக்க வேண்டும். நாம் தமிழகத்தை வளர்ச்சியடைந்த, பாதுகாப்பான, ஊழல் இல்லாத மாநிலமாக மாற்றுவோம். நான் வெளிப்படையாகப் பார்க்கிறேன், திமுக அரசின் கவுண்டவுன் தொடங்கிவிட்டது திமுக ஆட்சி தமிழகத்தின் வளர்ச்சிக்கு அபாயமானதாக உள்ளது. இங்கே இருக்கும் திமுக அரசாங்கம் நமது இளைஞர்களை போதைப்பொருள் குற்றவாளி கும்பலிடம் ஒப்படைத்து விட்டது. தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகமாக உள்ளது. தாய் தந்தைகளின் கண்முன்னே குழந்தைகள் சீரழிகிறார்கள். போதைப்பொருளில் இருந்து அவர்களை மீட்க வேண்டும். போதைப்பொருள் மற்றும் […]
சென்னை விமான நிலைய அவலம்
“இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரத்தின் நுழைவாயில் – சென்னை விமான நிலையத்திலிருந்து வெளியேறும் மக்களை இப்படித்தான் வரவேற்கிறார்கள்: எங்கும் போஸ்டர்கள் மயம். தெருவிளக்குகள் எரிவதில்லை. இதற்குக் சென்னை மாநகராட்சி, தாம்பரம் மாநகராட்சி அல்லது நெடுஞ்சாலைத்துறை என எந்த அமைப்பும் பொறுப்பேற்பதில்லை. இது மிகவும் மோசமானது.
தேமுதிக கட்சி கூட்டணிக்கு – தாமதம் ஏன்?
2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணியை இதுவரை இறுதி செய்யாத பிரேமலதா தொகுதி பங்கீடு விவகாரத்தில் இழுபறி நீடிப்பதே கூட்டணியை இறுதி செய்யாததற்கு காரணம் என தகவல் திமுக, அதிமுக என இரு தரப்பினரிடம் பிரேமலதா கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல் திமுக தரப்பில் ஒற்றை இலக்கில் மட்டுமே சீட் எனவும், அதிமுக தரப்பில் இரட்டை இலக்கத்தில் சீட் கொடுக்க ஒப்புதல் எனவும் தகவல்.
தை முடிவதற்குள் உரிய பதில் – ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
அடுத்தக்கட்ட நகர்வு குறித்து இன்னும் 2 நாட்களில் சென்னையில் நிர்வாகிகளுடன் ஆலோசிக்க உள்ளேன். தை மாதம் முடிவதற்குள் உரிய பதில் அளிப்பேன்” சட்டப்பேரவை தேர்தலுக்கான கூட்டணி நிலைப்பாடு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ஓபிஎஸ் பதில். இன்னும் 2 நாட்களில் சென்னையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. தை முடிவதற்கு இன்னும் நாட்கள் உள்ளன. தை முடிவதற்குள் உரிய பதில் அளிக்கப்படும். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு முடிவு எடுக்கப்படும். இவ்வாறு […]