விஜய் தலைமையை ஏற்பவர்களுடன் கூட்டணி”

எந்த கட்சியுடனும் தற்போது வரை கூட்டணி தொடர்பாக பேசவில்லை; தவெக தலைமையில் மட்டுமே 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்கப்படும்”அதிமுக உடன் கூட்டணி என தொடர்ந்து கூறப்பட்டு வரும் நிலையில், தவெக தரப்பில் விளக்கம்

மோடி அமெரிக்கா பயணம்

பிரதமர் நரேந்திர மோடி, வரும் பிப்ரவரி 13-ஆம் தேதி அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொள்கிறார்.அங்கு வாஷிங்டனில் அதிபர் டிரம்பை சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

தமிழகத்தில் இரட்டை இலக்கத்தில் பா.ஜனதா வெற்றி பெறும்-அண்ணாமலை பேச்சு

நான் சென்ற இடமெல்லாம், மத்தியில் மீண்டும் நிலையான, வலிமையான ஆட்சி அமைவதில் மக்கள் உறுதியாக உள்ளனர். தமிழகத்தில் இந்த முறை மும்முனை போட்டி நடந்தது. இதில், தமிழகத்தில் இரட்டை இலக்கத்தில் பா.ஜனதா வெற்றி பெறும்”இவ்வாறு அவர் கூறினார்.

கள நிலவரம் குறித்து அலசும் திமுக!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மருமகனான சபரீசன் கள நிலவரத்தை அறிந்துக் கொள்ள அனைத்து தொகுதிகளுக்கும் நேரில் சென்று ஆராய்ந்து வருகிறாராம். முதற்கட்டமாக கொங்கு மண்டலத்தில் ஆய்வு செய்து வரும் அவர், தேர்தல் வேலைகள், கூட்டணி கட்சிக்குள் ஒத்துழைப்பு எப்படி உள்ளிட்ட விவரங்களை சேகரித்து வருகிறாராம். மேலும் சில முக்கிய தொகுதிகளுக்கு சென்று கள ஆய்வும் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம்:

மானநஷ்ட வழக்கை நிராகரிக்கக்கோரி உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவிற்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம்உத்தரவு

மாணவர்கள் வளர் இளம் பருவத்தில், எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக ரூ.35 லட்சம் செலவில் 10 ஆலோசகர்களை பணியமர்த்த உள்ளோம்

சென்னைப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் வளர் இளம் பருவத்தில், எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக ரூ.35 லட்சம் செலவில் 10 ஆலோசகர்களை பணியமர்த்த உள்ளோம். -சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு!

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனின் தங்கை ஷர்மிளா காங்கிரசில் இணைய சந்திரபாபுவின் சதியே காரணம்.

ஆந்திர மாநில அரசின் ஆலோசகர் சஜ்ஜலா ராமகிருஷ்ணா நேற்று விஜயவாடாவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது: முதல்வர் ஜெகன் மோகனை வழக்குகள் போட்டு துன்புறுத்தியது காங்கிரஸ் கட்சி. அதே கட்சியில் அவரது தங்கை ஷர்மிளா சேர்ந்துள்ளார்.ஒய்எஸ்ஆர் குடும்பத்திற்கு காங்கிரஸ் கட்சி பல பிரச்னைகளை ஏற்படுத்தியது மாநில மக்கள் அனைவருக்கும் தெரியும். இருப்பினும், ஷர்மிளா ஒரு கட்சியின் தலைவராக அவரது முடிவுகளை அவர் எடுத்துள்ளார். ஒய்.எஸ்.சர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்ததன் பின்னணியில் தெலுங்கு தேசம் கட்சி […]

அதிமுக – பாஜக கூட்டணி இல்லை

வரும் சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதி நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் – ஈபிஎஸ்

தாம்பரத்தில் அண்ணா சிலைக்கு அதிமுகவினர் பேரணியாக சென்று மாலை அணிவிப்பு

பேரறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் அவர்களின் தலைமையில் தாம்பரம் மத்திய பகுதி கழகச் செயலாளர் எல்லார் செழியன் ஏற்பாட்டில் அண்ணாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தாம்பரம் சண்முகம் சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. பின்பு அங்கிருந்து அனைவருக்கும் இனிப்புகளும் வழங்கப்பட்டது. பின்பு தாம்பரம் […]