சென்னையில் ஐஏஎஸ் பயிற்சி மாணவியிடம் செயின் பறிப்பு

சென்னை தாம்பரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் சிவில் சர்வீஸ் பயிற்சி நிறுவனத்தில் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த 22 வயது மாணவி ஒருவர் பயிற்சி பெற்று வருகிறார். இவர் நேற்று மதியம் வகுப்பு முடிந்து பேருந்து நிலையம் நோக்கி நடந்து சென்றுள்ளார். இந்து மிஷன் மருத்துவமனை அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, லுங்கி மற்றும் சட்டை அணிந்துகொண்டு சாதாரணமாக வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென பாய்ந்து வந்து, மாணவி அணிந்திருந்த 7 பவுன் தாலி […]

சென்னை குரோம்பேட்டை ராதாநகர் சுரங்கப்பாதை திறக்கப்பட்டாலும் தொடரும் பிரச்சினைகள்

சென்னை குரோம்பேட்டை ராதாநகர் சுரங்கப்பாதை ஜனவரி 7-ந் தேதி திறக்கப்பட இருக்கிறது.  துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த சுரங்கப்பாதையை திறந்து வைக்கிறார். ராதா நகர் சுரங்கப்பாதை 17 ஆண்டுக்கு பிறகு பயன்பாட்டுக்கு வந்தாலும் அதில் நீடிக்கும் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும், என்று குடியிருப்போர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் ரயில் நிலையத்திற்கு கிழக்கே 2.5 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் ராதா நகர் ரயில்வே கேட்டை கடந்து தான் செல்ல வேண்டும். […]

பொங்கலுக்கு 22,797 சிறப்பு பஸ்கள் பேருந்துகளை இயக்க முடிவு

பொங்கலை ஒட்டி சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளுக்காக 22 797 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது .வரும் ஒன்பதாம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை இந்த பஸ்ஸில் இயக்கப்படும். இதற்காக கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம், பகுதிகளில் இந்த பேருந்துகள் இயக்கப்படுகின்றன.பொங்கலுக்கு தென் மாவட்டங்களுக்கு ஊருக்கு செல்லும் போது போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பழைய மகாபலிபுரம் சாலை, திருப்போரூர், கேளம்பாக்கம், செங்கல்பட்டு வழி அல்லது வண்டலூர் வெளி சுற்றுச்சாலையை தேர்வு செய்து பயன்படுத்துமாறு அமைச்சர் […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,02,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.12,830-க்கு விற்பனை செய்யப்படுகிறது

ஒவ்வொரு ரேஷன் கார்டு மீதும் 4.5 லட்சம் கடன் -அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ரேஷன் கார்டு வீதம் 4.5 லட்சம் கடன் உள்ளது என்று அண்ணாமலை கூறினார் புதுக்கோட்டையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:- தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. வீதியில் பெண்கள் நடமாட முடியவில்லை. பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறையினருக்கே தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை. கடந்த பொங்கலுக்கு ஒரு ரூபாய் கொடுக்கவில்லை; தேர்தல் என்பதால் ரூ.3000 தருகிறார்கள்; தமிழகத்தில் ஒரு ரேஷன் அட்டையும் 4.5 லட்சம் கடன் உள்ளதுதமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு […]

தங்கம் விலை மீண்டும் உயர்வு

தங்கம் விலை இன்று சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.140 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,580-க்கும், பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,00,640-க்கும் விற்பனை ஆகிறது. 24 காரட் தங்கம் ஒரு பவுன் ரூ.1,09,792-க்கு விற்பனை ஆகிறது.

பழைய ஓய்வூதியத் திட்டம் – முதல்வர் நாளை முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் 8-ம் நாளாக ஆசிரியர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக நாளை முதல்வர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என அரசு ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த மாதத்தில் வடபழனி -போரூர் மெட்ரோ ரெயில்

சென்னை பூந்தமல்லியில் இருந்து போரூர் வரைக்கும் மெட்ரோ ரயில் அனைத்து பணிகளும் முடிந்துவிட்டன. இதன் சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது . இந்த ரயில் இந்த மாதம் போக்குவரத்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போரூரில் இருந்து நேரடியாக வடபழனிக்கும் ரயில் போக்குவரத்தை தொடங்க ஆலோசனை நடந்து வருகிறது .இந்த மாத இறுதியில் இந்த போக்குவரத்து தொடங்கலாம் என்று கூறப்படுகிறது. முதலில் போரூர் முதல் வடபழனி வரை நேரடி போக்குவரத்தையும் பின்னர் ஜூன் மாதம் இடையில் […]

ஷார்ட் வீடியோக்களால் மனநல பாதிப்பா?? புதிய ஆய்வு

சுமார் 100,000 பேரை உள்ளடக்கி நடத்தப்பட்ட ஒரு புதிய பெரிய ஆய்வில், infinite-scroll தளங்களில் அடிக்கடி குறுகிய கால வீடியோக்களை பார்ப்பது, பலவீனமான சிந்தனைத் திறன் மற்றும் மோசமான மன ஆரோக்கியத்துடன் தொடர்புடையது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த வீடியோக்களை அதிகம் பயன்படுத்துபவர்களிடம் குறைந்த கவனக்குவிப்பு, குறைவான சுயக்கட்டுப்பாடு மற்றும் பலவீனமான அடிப்படைத் தர்க்க அறிவு இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களிடம் அதிகப்படியான பதற்றம், மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு காணப்படுகிறது. வேகமான மற்றும் அதிகத் தூண்டுதலைத் தரும் உள்ளடக்கங்களைத் […]

பத்மநாப நகர் கருமாரியம்மன் ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டு தரிசனம்

குரோம்பேட்டை பத்மநாப நகர் ஸ்ரீ கருமாரி அம்மன் ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாதாரணை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் கருமாரி அம்மனை தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து ஆலயத்துக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் புத்தாண்டை முன்னிட்டு கேசரி வழங்கப்பட்டது.