தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் கைது
சென்னையில் துண்டு பிரசுரங்களை விநியோகித்த தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது செய்யப்பட்டார். முன் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக கூறி, தனியார் மண்டபத்தில் உள்ள சந்திப்பு இடத்தில் அவரை கைது செய்து, தி.நகர் போலீசார் கைது செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
நடிகரும், த.வெ.க தலைவருமான விஜய் ஆளுநர் ரவியை சந்தித்து மனு அளித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காக்க வேண்டும், மாநில அரசு கோரியுள்ள பெஞ்சல் புயல் நிவாரணத்திற்கான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற்று தர வேண்டும் என்று விஜய் தனது மனுவில் கோரியுள்ளார்.
தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் கைது
சென்னையில் துண்டு பிரசுரங்களை வழங்கியதவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது. முன் அனுமதியின்றி கூட்டத்தை கூட்டியதற்காக, ஆனந்தை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ள தி.நகர் போலீசார்.
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி
பொங்கல் பண்டிகையின்போது, தமிழகம் முழுவதிலும் உள்ள நியாயவிலைக் கடைகளின் மூலம் ஏழைகளுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட உள்ளது
இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் கைத்தறி மற்றும் பெடல் தறிகள் மூலம் உற்பத்தி செய்யப்படுவதால், கைத்தறி மற்றும் பெடல்தறி நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்புகளுக்கு இத்திட்டம் பெரிதும் உதவியாக இருக்கிறது. இத்திட்டத்தின் மூலம் 2025 தைப் பொங்கல் திருநாளையொட்டி, தமிழகம் முழுவதிலும் உள்ள ஏழை மக்களுக்கு ஏறத்தாழ 1 கோடியே 77 லட்சத்து 64 ஆயிரம் சேலைகளும், அதேபோல ஏறத்தாழ 1 கோடியே 77 லட்சத்து 22 ஆயிரம் வேட்டிகளும் வழங்கப்பட உள்ளன.இந்நிலையில் பொங்கல் இலவச வேட்டி […]
அண்ணா பல்கலை.யில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு
மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தின் எதிரொலியாக அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் உள்ள ஊழியர்கள் அடையாள அட்டை கேட்டால் கண்டிப்பாக காண்பிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் 2-ம் ஆண்டு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள், பெற்றோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்முறையை […]
அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் கைதாகியுள்ள ஞானசேகரன் என்ற நபர், ஏற்கனவே இது போன்ற குற்றங்களில் பல முறை ஈடுபட்டவர் என்பதும், அவர் திமுகவின், சைதை கிழக்கு பகுதி மாணவர் அணி துணை அமைப்பாளர் என்பதும் தெரிய வந்துள்ளது.
தமிழகம் முழுவதும், இதுபோன்ற குற்ற வழக்குகளில் இருந்து ஒரு தெளிவான திட்டம் புலப்படுகிறது. தொடர்ந்து தமிழகமெங்கும் நடைபெறும் குற்றங்களில், குற்றவாளிகள் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்றால், ஆளுங்கட்சி நிர்வாகிகள் அழுத்தத்தால், காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்களே. தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாக, 15 வழக்குகள் உள்ள ஒருவரை, இத்தனை நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவைத்ததால்தான், இன்று ஒரு அப்பாவி மாணவிக்கு இந்தக் கொடூரம் நடைபெற்றிருக்கிறது. இதற்கு முழுக்க முழுக்க திமுக […]
வாடிக்கையாளர்களை ஈர்க்க வாட்ஸ் அப் புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போது ஆவணங்களை ஸ்கேன் செய்யும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது
இதனால் மூன்றாம் தரப்பு செயலிகளை ஸ்கேனிங்கிற்கு பயன்படுத்த தேவையில்லை. வாட்ஸ் அப்பில் ஸ்கேன் செய்து அப்படியே ஆவணங்களை அனுப்பலாம். முதல்கட்டமாக IOS பயனர்களுக்கு இந்த வசதி கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் ஆன்ட்ராய்டு போன்களுக்கும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவாவில் சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டையொட்டி சுற்றுலா தலங்களில் ஒன்றான கோவா களைகட்டி உள்ளது.
இந்நிலையில், வடக்கு கோவாவில் உள்ள கலங்குட் கடற்கரை பகுதியில் இருந்து ஒரு சுற்றுலா படகு நேற்று சென்று கொண்டிருந்தது. இதில் மகாராஷ்டிரா மாநிலம் கெட் பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் உள்பட 21 பேர் பயணம் சென்றனர். அரபி கடலின் நடுவே சென்று கொண்டிருந்த சுற்றுலா படகு அதிக பாரம் காரணமாக கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்பு குழுவினர் கடலில் தத்தளித்து கொண்டிருந்த அனைவரையும் மீட்டு […]
எம்ஜிஆர் நினைவு நாள் | தாம்பரத்தில் அதிமுகவினர் பேரணி
எம்ஜிஆர் நினைவு நாளை ஒட்டி தாம்பரத்தில் அதிமுகவினர் மௌன ஊர்வலம் சென்றனர்