தாம்பரம் பகுதியில் கேபிள் கழுத்தில் சிக்கி முதியவர் படுகாயம்
தாம்பரம் மா நகராட்சி மண்டலம் 3,வார்டு 22/39 , திருமலை நகர் வடக்கு விரிவாக்கம் இரண்டாம் குறுக்கு தெருவில்,சட்ட விரோதமாக கேபிள்கள் மின் கம்பத்தில் கட்டப்பட்டு உள்ளன. இதை பற்றி ஏற்கனவே பல முறை புகார் அளித்தும் ஒரு பயனும் இல்லை. முதியவர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் வரும் போது, சட்ட விரோத கேபிள் கழுத்தில் மாட்டி கீழே விழுந்தார். நல் வாய்ப்பாக ,உயிர் சேதம் ஏதும் இல்லை. அந்த கேபிளில் மின்சாரம் பாய்ந்து இருந்தால் […]
வரும் 5ம் தேதி டாஸ்மாக் கடைகள் விடுமுறை!
வரும் 5ம் தேதி மிலாடி நபி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் அன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த நாளில் மதுபாட்டில்களை பதுக்கி வைப்பது அல்லது கள்ளச் சந்தையில் விற்பனை செய்வது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரம்புட்டான் பழம் சாப்பிட்ட சிறுவன் பலி;
மேலப்பாளையத்தை சேர்ந்தவர் நிஜாம் என்பவரது 5 வயது மகனுக்கு நேற்றிரவு அவனது தாத்தா ரம்புட்டான் பழத்தை வாங்கிகொடுத்தார்.பழத்தை விழுங்கிய சிறுவன் சிறிது நேரத்தில் அதன் விதை கழுத்தில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டு பலியானான்
சென்னையில் கொரோனா : ஒருவர் உயிரிழப்பு
சென்னையில் முதியவர் ஒருவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் அடுத்த சட்டமங்கலம் பகுதியில் வசித்து வந்தவர் ஜோசியர் மோகன் (65). சிறுநீரக செயலிழப்புக்கு சிகிச்சை பெறுவதற்காக, அவர் கடந்த 15-ம் தேதி சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பலியானார் தமிழ்நாட்டில் 69 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்
பூந்தமல்லி ஹோட்டலில் மட்டன் குழம்பில் தவளை.
பூந்தமல்லி நகராட்சி அலுவலகம் அருகே ஒரு ஹோட்டல் உள்ளது .இங்கு ஒரு தம்பதியினர் சாப்பிட செல்லும்போது பிரியாணி ஆர்டர் செய்தார்கள். அப்போது பிரியாணிக்கு ஊற்றிய மட்டன் குழம்பில் தவளை இருந்ததை கண்டுபிடித்தனர் இது பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு வந்து ஆய்வு செய்து அந்த ஹோட்டலுக்கு சீல் வைத்தனர்
“கேரளாவில் பாஜக முதன்முறையாக வெற்றி“

ம.பி., சத்தீஸ்கர், குஜராத், டெல்லி மாநிலங்களில் பாஜக முழு வெற்றி பெற்றுள்ளது கேரளாவிலும் பாஜக முதல் முறையாக வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி
சித்தரத்தையால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

சித்தரத்தை பயன்கள்… இஞ்சி குடும்பத்தைச் சார்ந்ததுதான் சித்தரத்தை ஆகும். இது கிழக்காசிய நாடுகளில் “சீன இஞ்சி” என்று அழைக்கப் படுகின்றது. சித்தரத்தையில் இரு பிரிவுகள் உள்ளன. சித்தரத்தை, பேரரத்தை என்பதாகும். இந்தியாவில் இவை பயிரிடப்படுகின்றன. இதன் வேர் பல மருத்துவ குணங்கள் கொண்டது.ஆஸ்துமா, இளைப்பு, இருமல், சளி போன்றவற்றை குணப்படுத்தும். மூச்சடைப்பு ஏற்படும் நபர்களுக்கு சித்தரத்தை, அதிமதுரம், தாளிசபத்திரி, திப்பிலி மற்றும் மிளகு இவை அனைத்தையும் லேசாக வறுத்து அரைத்துப் பொடியாக்கி அதை தேனில் கலந்து சாப்பிட்டு […]
பாஸ்பரஸ், கால்சியம் சத்து நிறைந்த சேப்பங்கிழங்கு அளிக்கும் நன்மை

சேப்பங்கிழங்கில் நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், வைட்டமின் A, C, E வைட்டமின் B6 மற்றும் போலேட் (folate) என்னும் vitamin B-9 அதிக அளவில் உள்ளது.சேப்பங் கிழங்கில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்து உள்ளதால் பற்களுக்கும் எலும்புகளுக்கும் வலுவை சேர்க்கும். சேப்பங்கிழங்கில் உள்ள விட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிஜென்டுகள் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அதிகரிக்க செய்து உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.சேப்பங்கிழங்கு சாப்பிடுவது வயிற்றுப்பூச்சித் தொல்லையைப் போக்கும். பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்களுக்கு எதிராகப் போராடக்கூடிய […]
செல்லப்பிராணிகளுடன் நேரத்தை செலவிடும்போது ரத்த அழுத்தம் குறைகிறது

செல்லப் பிராணிகளுடன் நேரத்தை செலவிடும்போது ரத்த அழுத்தம், மனச்சோர்வு, பதற்றம் போன்ற உணர்வுகளை ஏற்படுத்தும் கார்டிசோல் எனும் தீங்கு விளைவிக்கும் ஹார்மோன் குறைந்து, ஆக்சிடோசின் எனும் மகிழ்ச்சிக்கான ஹார்மோன் அதிகமாக சுரப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இதய நோய் மற்றும் பக்கவாதத்தால் ஒவ்வொரு ஆண்டும் பல பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். செல்லப்பிராணிகள் வளர்ப்பு, குறிப்பாக நாய்கள் வளர்ப்பது ரத்தத்தில் கொலஸ்டிரால் மற்றும் டிரை கிளிசரைடு அளவுகளைக் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.செல்லப்பிராணியை பராமரிப்பதும், குழந்தையைப் பராமரிப்பதும் கிட்டத்தட்ட ஒன்றாகும். செல்லப்பிராணியை வளர்க்கும் நபர்களுக்கு […]
மருத்துவக் குறிப்பு

பால் சேர்க்காமல் டீயுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு விட்டு குடித்தால் தொண்டை வலி நீங்கும்.