சித்தரத்தையால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

சித்தரத்தை பயன்கள்… இஞ்சி குடும்பத்தைச் சார்ந்ததுதான் சித்தரத்தை ஆகும். இது கிழக்காசிய நாடுகளில் “சீன இஞ்சி” என்று அழைக்கப் படுகின்றது. சித்தரத்தையில் இரு பிரிவுகள் உள்ளன. சித்தரத்தை, பேரரத்தை என்பதாகும். இந்தியாவில் இவை பயிரிடப்படுகின்றன. இதன் வேர் பல மருத்துவ குணங்கள் கொண்டது.ஆஸ்துமா, இளைப்பு, இருமல், சளி போன்றவற்றை குணப்படுத்தும். மூச்சடைப்பு ஏற்படும் நபர்களுக்கு சித்தரத்தை, அதிமதுரம், தாளிசபத்திரி, திப்பிலி மற்றும் மிளகு இவை அனைத்தையும் லேசாக வறுத்து அரைத்துப் பொடியாக்கி அதை தேனில் கலந்து சாப்பிட்டு […]

பாஸ்பரஸ், கால்சியம் சத்து நிறைந்த சேப்பங்கிழங்கு அளிக்கும் நன்மை

சேப்பங்கிழங்கில் நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், வைட்டமின் A, C, E வைட்டமின் B6 மற்றும் போலேட் (folate) என்னும் vitamin B-9 அதிக அளவில் உள்ளது.சேப்பங் கிழங்கில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்து உள்ளதால் பற்களுக்கும் எலும்புகளுக்கும் வலுவை சேர்க்கும். சேப்பங்கிழங்கில் உள்ள விட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிஜென்டுகள் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அதிகரிக்க செய்து உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.சேப்பங்கிழங்கு சாப்பிடுவது வயிற்றுப்பூச்சித் தொல்லையைப் போக்கும். பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்களுக்கு எதிராகப் போராடக்கூடிய […]

செல்லப்பிராணிகளுடன் நேரத்தை செலவிடும்போது ரத்த அழுத்தம் குறைகிறது

செல்லப் பிராணிகளுடன் நேரத்தை செலவிடும்போது ரத்த அழுத்தம், மனச்சோர்வு, பதற்றம் போன்ற உணர்வுகளை ஏற்படுத்தும் கார்டிசோல் எனும் தீங்கு விளைவிக்கும் ஹார்மோன் குறைந்து, ஆக்சிடோசின் எனும் மகிழ்ச்சிக்கான ஹார்மோன் அதிகமாக சுரப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இதய நோய் மற்றும் பக்கவாதத்தால் ஒவ்வொரு ஆண்டும் பல பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். செல்லப்பிராணிகள் வளர்ப்பு, குறிப்பாக நாய்கள் வளர்ப்பது ரத்தத்தில் கொலஸ்டிரால் மற்றும் டிரை கிளிசரைடு அளவுகளைக் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.செல்லப்பிராணியை பராமரிப்பதும், குழந்தையைப் பராமரிப்பதும் கிட்டத்தட்ட ஒன்றாகும். செல்லப்பிராணியை வளர்க்கும் நபர்களுக்கு […]

மருத்துவக் குறிப்பு

பால் சேர்க்காமல் டீயுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு விட்டு குடித்தால் தொண்டை வலி நீங்கும்.

மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிடுவது நல்லதா?

மீன் எண்ணெய் மாத்திரையை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டால், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு கண் பார்வை நன்கு தெரிவதோடு, மூளை வளர்ச்சியும் நன்றாக இருக்கும். இதில் சோடியம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட், விட்டமின் ஏ, டி மற்றும் விட்டமின் பி 12 போன்ற சத்துக்கள் உள்ளன, மேலும் 100 கிராம் மீன் எண்ணெயில், நிறைவுற்ற கொழுப்பு – 21 கிராம், நிறைவுறதாக கொழுப்பு 16 கிராம் உள்ளன. நம் உடலில் உள்ள ட்ரைகிளிசரைடு என்னும் கொலஸ்ட்ரால், இதயத்திற்கு பெரும் பாதிப்பை […]

வயிற்று உபாதைகளை குணமாக்கும் வெண்டைக்காய்

வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை வளரும் கணக்கு நன்றாகப் போடலாம் என்று சொல்லிச் சொல்லியே குழந்தைகளுக்கு ஊட்டும் அம்மாக்களை பார்த்துள்ளோம்.வெண்டைக் காய்க்கும் அறிவு வளர்ச்சிக்கும் நேரடி தொடர்பு இருக்கிறதோ இல்லையோ இரத்த சோகை, மூச்சிரைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரழிவு வயிற்றுப்புண், பார்வைக் குறைபாடு என அனைத்து நோய்களையும் தீர்க்கும் சிறந்த மருந்தாக வெண்டைக்காய் உள்ளது.கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமான போலிக் அமிலம் வெண்டைக்காயில் அதிகமாக உள்ளது. கர்ப்பத்தில் உள்ள குழந்தையானது உள்ளே நல்லபடியாக வளரவும் முதல் ட்ரைமெஸ்டரின் […]

பாலில் சில பொருட்களை கலந்துகுடிக்கும்போது கிடைக்கும் கூடுதல் பயன் ..

ஏராளமான ஊட்டச்சத்துகள் அடங்கிய பாலில் சில பொருட்களை கலந்து குடிக்கும்போது கூடுதல் பயன்களும், மருத்துவ நன்மைகளும் நமக்கு மிகவும் கிடைக்கின்றது. அது என்ன என தெரிந்து கொள்வோம்.பாலில் பூண்டு சேர்த்து குடிப்பதால் சளி மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட வியாதிகள் குணமாகும். தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பாலில் பூண்டு கலந்து குடித்தால் பால் சுரப்பு அதிகரிக்கும். நுரையீரல் அழற்சி உள்ளவர்கள் பூண்டு பால் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.இதனை அடுத்து பாலில் இஞ்சி கலந்து குடித்தால் உடலில் உள்ள […]

நாவல்பழத்தை சர்க்கரை நோயாளிகள், கர்ப்பிணிகள் சாப்பிடலாமா.?

ஆண்டிஆக்ஸிடண்ட், பாலிஃபினால்ஸ் உள்ளிட்டவை அடங்கிய நாவல்பழத்தை சாப்பிட்டால் இதய நோய்களுக்கான அபாயம் குறைகிறது. இதில் உள்ள விட்டமின் சி சத்து சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இயற்கையின் படைப்பாகவே இருந்தாலும் சில உணவுகளை விரும்பிய வண்ணம் எல்லோரும் சாப்பிட முடியாதபடி நம்மை ஆட்கொண்டுள்ள நோய்களும், வாழ்வியல் சூழல்களும் கட்டுப்படுத்தி விடுகிறது. அதிலும், சர்க்கரை நோய் வந்துவிட்டால் எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக்கூடாது என்று தனிப்பட்டியலே போடவேண்டியுள்ளது. தற்போதைய சீசனில் தெருவோரக்கடைகள் முதல்பழமுதிர்நிலையங்கள் வரையில் அனைத்துக்கடைகளிலும் தவறாமல் விற்பனை செய்யப்படும் […]

​உடலுக்கு நன்மை தரும் கருப்பு கவுனி அரிசி.. நீங்களும் சாப்பிடலாம்..

வெள்ளை அரிசியுடன் ஒப்பிடும் போது, கருப்பு கவுனி அரிசியில் அதிக புரதச்சத்து அடங்கி இருக்கிறது. இன்றைய காலத்தில் பொதுவாக எல்லா உணவுகளும் ‘அரிசியால்’ செய்யப்பட்டு வருகிறது. அதிகளவு அரிசி உண்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது என்று கூறப்படுகிறது. இது உண்மை தான். இருப்பினும் இப்போது நாம் பார்க்கக்கூடிய அரிசி உடல்நலத்திற்கு எந்த தீங்கும் இல்லாமல் நன்மையை விளைவிக்கக் கூடிய Wild Rice என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கருப்பு கவுனி அரிசி ஆகும். வட அமெரிக்காவை பூர்வீகமாகக் […]