சென்னை விமான நிலைய அவலம்
“இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரத்தின் நுழைவாயில் – சென்னை விமான நிலையத்திலிருந்து வெளியேறும் மக்களை இப்படித்தான் வரவேற்கிறார்கள்: எங்கும் போஸ்டர்கள் மயம். தெருவிளக்குகள் எரிவதில்லை. இதற்குக் சென்னை மாநகராட்சி, தாம்பரம் மாநகராட்சி அல்லது நெடுஞ்சாலைத்துறை என எந்த அமைப்பும் பொறுப்பேற்பதில்லை. இது மிகவும் மோசமானது.
தேமுதிக கட்சி கூட்டணிக்கு – தாமதம் ஏன்?
2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணியை இதுவரை இறுதி செய்யாத பிரேமலதா தொகுதி பங்கீடு விவகாரத்தில் இழுபறி நீடிப்பதே கூட்டணியை இறுதி செய்யாததற்கு காரணம் என தகவல் திமுக, அதிமுக என இரு தரப்பினரிடம் பிரேமலதா கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல் திமுக தரப்பில் ஒற்றை இலக்கில் மட்டுமே சீட் எனவும், அதிமுக தரப்பில் இரட்டை இலக்கத்தில் சீட் கொடுக்க ஒப்புதல் எனவும் தகவல்.
அதிமுக பேனர்களில் டிடிவி தினகரன் புறக்கணிப்பு!
மதுராந்தகத்தில் இன்று நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்துக்காக அதிமுக தரப்பில் வைக்கப்பட்டுள்ள பேனர்களில் அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரனின் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.ஆனால் அ.ம.மு.கபேனர்களில் எடப்பாடி படம் இடம்பெற்றுள்ளது.
தி.மு.க.வில் இணைந்த தினகரன் கட்சி பிரமுகர்
பா.ஜ.க.-வுடன் கூட்டணி அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமமுக துணைப் பொதுச் செயலாளர் கடம்பூர் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா தி.மு.க.-வில் இணைந்தர். மேலும் தென்மாவட்டங்களைச் சேர்ந்த 3 மாவட்டச் செயலாளர்களும் முன்னணி நிர்வாகிகளும் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.-வில் இணைந்தனர் .
12ம் வகுப்பு பொதுத்தேர்வு – ஹால் டிக்கெட் வெளியீடு.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பதிவெண் உடன் கூடிய பெயர் பட்டியல், ஹால் டிக்கெட் வெளியீடு geapp.tnschools.gov.in- User ID, Password பயன்படுத்தி ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். மாணவர்களின் தேர்வு எண்ணுடன் கூடிய பெயர் பட்டியல் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 11ம் வகுப்பு அரியர் வைத்துள்ள மாணவர்களின் பெயர் பட்டியலை ஜன.24 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது! பிரதமர் மோடி
பிரதமர் மோடி தனது X தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது: “தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது. மதுராந்தகத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் பேரணியில் நான் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் கலந்துகொள்ளவிருக்கிறேன். திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் சாதனையும் பிராந்திய பெருவிருப்பங்கள் மீதான அதன் அர்ப்பணிப்பும் மாநில மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன” எனக் குறிப்பிட்டுள்ளார்.
படப்பை அருகே அதிகாலை மின்கசிவு காரணமாக பர்னிச்சர் தயாரிக்கும் கம்பெனியில் தீவிபத்து, பல லட்சம் மதிப்புள்ள மரப்பொருகள், இயந்திரம், மேற்கூரை எரிந்து நாசம்.
தாம்பரம்:- சென்னை தாம்பரம் அடுத்த படப்பை ஒரத்தூர் சாலையில் அபரஜித்தன் என்பவர் பர்னிச்சர் தயாரிக்கும் நிறுவனம் நடத்திவந்தார், டேபிள், சேர் உள்ளிட்ட மரப்பொருள்கள் தயாரித்துவந்த நிலையில் நேற்று வழக்கம்போல் கம்பெனியை மூடி சென்ற நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் தீடீர் தீபற்றி எரிந்துள்ளது, இங்கு இதில் மரப்பொருள்கள், இயந்திரங்கள், கம்பெனியில் இரும்பு கூரை உள்ளிட்டவை மல மலவென தீ பிடித்து எரிந்துந்துள்ளது, தகவல் அறிந்த படப்பை, ஒரகடம் தீயணைப்பு வாகனத்தில் வந்த வீரர்கள் தீயை முழுமையாக […]
செங்கல்பட்டில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வெள்ளி கிலோவுக்கு ரூ. 20,000 உயர்வு!
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை போட்டி போட்டுக் கொண்டு உயர்ந்து வரும் நிலையில், வெள்ளிக்கிழமை காலை தங்கம் சவரனுக்கு ரூ. 3,600-ம், வெள்ளி கிலோவுக்கு ரூ. 20,000-ம் அதிகரித்து அதிர்ச்சி அளித்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ. 14,650-க்கும், ஒரு சவரன் ரூ. 1,17,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி ஒரு கிராம் ரூ. 360-க்கும், ஒரு கிலோ ரூ. 3,60,000-க்கும் விற்பனையாகி வருகின்றது. அதேபோல் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.1720 […]
கிரீன்லாந்து விவகாரத்தில் பின் வாங்கினார் டிரம்ப்
கிரீன்லாந்து பகுதியை ஆக்கிரமிக்க போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி வந்தார். இதற்கு ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன இந்த நிலையில் தற்போது ராணுவ மூலம் அந்த தீவை கைப்பற்று முயற்சி இல்லை என்று அவர் அறிவித்துள்ளார். இதன் விளைவாக நெருக்கடி குறைந்துள்ளது.