
இன்று வரலாறு காணாத வகையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 27) சவரனுக்கு ரூ 720 உயர்ந்து ஒரு சவரன் ரூ 85,120-க்கு விற்பனையாகிறது. அதேபோல கிராமுக்கு ரூ 90 உயர்ந்து ஒரு கிராம் ரூ 10,640-க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 6 உயர்ந்து ஒரு கிராம் ரூ 159-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ 1,59,000 ஆகும்.