
சிட்லபாக்கத்தில் 3 பள்ளிகளுக்கு மத்தியில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்காத நிலை இருந்து வருகிறது. இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளனர்.
தாம்பரம் மாநகராட்சி 43 வது வார்டு காந்தி தெரு விரிவுக்கு அருகாமையில் உள்ள 37 ஆவது வார்டு வழியாக கழிவு நீர் வந்து கொண்டிருக்கிறது.
இது அங்குள்ள மூன்று பள்ளிக்கூடங்களுக்கு மத்தியில் சென்று வாசலில் தேங்கி நிற்கிறது.
கடந்த மூன்று வருடமாக இந்த பிரச்சனை நீடித்து வருகிறது.
இது தொடர்பாக மாமன்ற கூட்டத்தில் அந்த பகுதி மாமண்ட உறுப்பினர்கள் சிட்லபாக்கம் ஜெகன், சரண்யா மதுரை வீரன் போன்றவர்கள் மாமன்ற கூட்டத்தில் முறையிட்டாலும் கூட சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை.
இதனால் மாணவர்கள் பெரிதும் அவதிப்படுகிறார்கள் .
மாணவ மாணவிகளை சந்திக்கவே தயக்கமாக உள்ளது என்று மாமன்ற உறுப்பினர்கள் வேதனையுடன் குறிப்பிட்டார்கள்..
சிட்லபாக்கம் பகுதியில் ஒரு முக்கியமான இடத்தில் தினசரி அதிக அளவு மாணவர்கள் வந்து செல்லும் இடத்தில் இவ்வாறு கழிவுநீர் வந்து தேங்கி நிற்பது அந்த பகுதி மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது