செமிகண்டக்டர் உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய அரசாங்கம் ரூ.76 ஆயிரம் கோடி ஊக்குவிப்பு தொகுப்பு திட்டத்தை செயல்படுத்துகிறது. இந்த செமிகண்டக்டர் தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருளான சிலிக்கான் மற்றும் குவார்ட்ஸ் மணல் தமிழ்நாட்டிலும் கிடைக்கிறது.

இதை பயன்படுத்தி தமிழ்நாட்டிலும் செமிகண்டக்டர் தயாரிப்பதற்காக தமிழக அரசு சென்னை மற்றும் கோவையில் உற்பத்தி பூங்காக்களை தொடங்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆக மிக விரைவில் இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் செமிகண்டக்டர் உற்பத்தியில் பெரிய புரட்சி நடக்கப்போகிறது.

இதன்மூலம் தயாரிக்கப்படும் சிப்-கள் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதோடு மட்டுமல்ல வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது.