
ஆப்பிள் நிறுவனம் தற்போது சந்தையில் ஐபோன் 17, ஐபோன் 17 ஏர், ஐபோன் 17 புரோ, ஐபோன் 17 புரோ மேக்ஸ் போன்கள் அறிமுகமாகி உள்ளன. இந்த முறை புது வரவாக ஐபோன் 17 ஏர் வெளிவந்துள்ளது. இதோடு ஆப்பிள் ஏர்பாட்ஸ் புரோ 3, ஆப்பிள் வாட்ச் எஸ்இ, ஆப்பிள் வாட்ச் 11 சீரிஸ், ஆப்பிள் வாட்ச் 3 அல்ட்ரா உள்ளிட்ட கேட்ஜெட்களும் அறிமுகமாகி உள்ளன. வரும் 19-ம் தேதி சந்தையில் இவை விற்பனைக்கும் கிடைக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.