பிரதமர் மோடியிடம் வாழ்த்து பெற்ற இந்திய வீரர்கள்

டெல்லி: டி20 உலகக்கோப்பையை பிரதமர் மோடியிடம் கொடுத்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து பெற்றனர். உலகக்கோப்பையை வென்ற இந்திய வீரர்களை வாழ்த்திய பிரதமர் மோடி, அவர்களுக்கு விருந்தளித்து வருகிறார்.

2026ல் இந்தியா, இலங்கையில் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்த முன்னணி அணிகள்

ஐசிசி டி20 தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் உள்ள நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகள் நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் லீக் சுற்றிலேயே வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளன. சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறாததால், 2026ல் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இந்த அணிகள் இழந்ததுள்ளன. தகுதிச் சுற்று போட்டிகளில் விளையாடி வென்றால் மட்டுமே 2026 டி20 உலக கோப்பையில் விளையாட முடியும்.

தனது முதல் டி20 உலகக் கோப்பை தொடரிலேயே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது அமெரிக்கா அணி

அமெரிக்கா, அயர்லாந்து இடையிலான நேற்றைய போட்டி மழையால் ரத்தானதால், குரூப் A பிரிவில் இடம்பெற்றுள்ள அமெரிக்க அணி 5 புள்ளிகளுடன் 2 இடம்பிடித்தது. இதன் மூலம் 2026ல் இந்தியாவில் நடைபெறவுள்ள உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளது. அமெரிக்க அணி தேர்வு பெற்றதால் பரிதாபமாக டி20 உலக கோப்பையில் இருந்து வெளியேறியது பாகிஸ்தான்.

உலககோப்பை கால்பந்து தகுதிப்போட்டியில் சர்ச்சை:விதியை மீறி கோல் அடித்து ஏமாற்றியதா கத்தார்..?

உலககோப்பை கால்பந்து தகுதிப்போட்டியில், இந்தியா-கத்தார் இடையேயான ஆட்டத்தில் எல்லைக் கோட்டை தாண்டி சென்ற பந்தை மீண்டும் உள்ளே கொண்டு வந்து கத்தார் வீரர்கள் கோல் அடித்ததால் பரபரப்பு. விதிப்படி தவறு என்றாலும், ரெஃப்ரீ கத்தாருக்கு சாதகமாக நடந்து கொண்டது சர்ச்சையாகியுள்ளது. 73வது நிமிடத்தில், கோட்டுக்கு வெளியே சென்ற பந்தை அல் ஹசன் உள்ளே தள்ளி விட, அய்மென் கோல் அடித்ததால் 2-1 என்ற கோல் கணக்கில் கத்தார் வெற்றி பெற்றதாக அறிவிப்பு. இப்போட்டியில், கால்பந்தில் ரிவ்யூ பார்க்கும் […]

உலகக் கோப்பை தகுதிச் சுற்று வாய்ப்பை இழந்தது இந்தியா

கத்தாரிடம் தோல்வியடைந்த இந்திய அணி பிஃபா உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் இருந்து வெளியேறியது. தோஹாவில் நடந்த போட்டியில் கத்தாரிடம் 1-2 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது இந்திய அணி. தகுதிச் சுற்று ஆட்டத்தின் முதல் பாதியில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.

டி20 உலக கோப்பை தொடருக்கு முதல்முறையாக தகுதி பெற்றது உகாண்டா அணி

உலக கோப்பை டி20 தொடருக்கு தேவையான 20 அணிகளும் தேர்வாகிவிட்ட நிலையில் ஜிம்பாப்வே அணி வெளியேறியது. தேர்வான அணிகள் : மேற்கிந்திய தீவுகள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, கனடா, நேபாளம், ஓமன், நமீபியா, உகாண்டா.

விதிகளுக்கு உட்பட்டு நடுவரிடம் முறையிட்டேன்” – மேத்யூஸ் டைம்டு அவுட் குறித்து ஷகிப் அல் ஹசன்

புதுடெல்லி: இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விவாத பொருளாகி உள்ளது இலங்கை வீரர் மேத்யூஸ் ‘டைம்டு அவுட்’ முறையில் ஆட்டமிழந்த விதம். கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இது நடந்தது. இந்த சூழலில் அது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார் வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன். “இப்போது நடுவரிடம் முறையிட்டால் மேத்யூஸ் வெளியேற வேண்டும் என எங்கள் அணியின் ஃபீல்டர் […]

வரலாற்றில் முதல் முறை ‘டைம்டு அவுட்’ ஆன ஏஞ்சலோ மேத்யூஸ் – நடந்தது என்ன?

டெல்லி: வங்கதேசத்துக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இலங்கையின் ஏஞ்சலோ மேத்யூஸ் ‘டைம்டு அவுட்’ முறையில் ஆட்டமிழந்துள்ளார். இதன்மூலம் 140 ஆண்டுகளுக்கும் மேலான உலக கிரிக்கெட் வரலாற்றில் ‘டைம்டு அவுட்’ முறையில் ஆட்டமிழந்த முதல் வீரர் ஆகியுள்ளார் ஏஞ்சலோ மேத்யூஸ். இந்த விதத்தில் இது ஒரு எதிர்மறை உலக சாதனை. முதல் பந்தை சந்திக்க காலதாமதம் செய்ததன் காரணமாக, வங்கதேச முறையீட்டினை அடுத்து நடுவர்களால் மேத்யூஸ் டைம்டு அவுட் செய்யப்பட்டார். டைம்டு அவுட்: இந்த விதிமுறையை […]

டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு தொடர்பாக வீரர்களின் நலனுக்காக நிபுணர்களிடம் ஆலோசிக்கிறது ஐசிசி.உலகக்கோப்பை தொடரில் டெல்லியில் வங்கதேசம் –இலங்கை இன்று மோதவுள்ள நிலையில் ஐசிசி ஆலோசனை நடத்துகிறது