கிரீன்லாந்து விவகாரத்தில் பின் வாங்கினார் டிரம்ப்

கிரீன்லாந்து பகுதியை ஆக்கிரமிக்க போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி வந்தார். இதற்கு ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன இந்த நிலையில் தற்போது ராணுவ மூலம் அந்த தீவை கைப்பற்று முயற்சி இல்லை என்று அவர் அறிவித்துள்ளார். இதன் விளைவாக நெருக்கடி குறைந்துள்ளது.

ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த முயன்றால் ஈரானை அமெரிக்கா அழித்துவிடும். ஈரான் என்ற நாடு இந்த பூமியில் இருந்ததற்கான அடையாளம் இல்லாதபடி துடைத்தெறியப்படும். ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து ஆலோசகர்களுக்கு தெளிவான அறிவுறுத்தலை வழங்கியுள்ளேன் – என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறினார்.

டிரம்ப் பயணித்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு…

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பயணித்த Air Force One விமானம், சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார மன்றத்தில் பங்கேற்பதற்காக புறப்பட்ட நிலையில், பயணத்தின் போது சிறிய மின்சார கோளாறு கண்டறியப்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக விமானம் வாஷிங்டனில் உள்ள Joint Base Andrews விமான நிலையத்துக்கு திரும்பி தரையிறங்கியது. விமானம் புறப்பட்ட 30–40 நிமிடங்களுக்குள் “சிறிய மின்சார பிரச்சினை” கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, விமானக் குழு இந்த முடிவை எடுத்ததாக வெள்ளை மாளிகை தரப்பில் […]

அமெரிக்காவில் போர்ப் பதற்றமா?

அமெரிக்காவில் உலகளவிலான பதற்ற நிலை அல்லது போர்ப் பதற்றம் ஏற்படும் போது மட்டுமே அமெரிக்க அதிபரின் ரகசிய விமானங்களில் ஒன்றான டூம்ஸ்டே விமானம் (Boeing E-4B Nightwatch) பறக்கவிடப்படும். இந்த நிலையில், சுமார் 51 ஆண்டுகால வரலாற்றில் கடந்த வாரத்தில் அமெரிக்க வான்வெளியில் டூம்ஸ்டே விமானத்தைக் கண்டதாக பலரும் தெரிவித்தனர். டூம்ஸ்டே, மிகவும் ரகசியமான ஒரு போர் விமானம். தரையில் பாதுகாப்பு இல்லை என்ற நிலை வரும் போது, அதிபரும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் இந்த விமானத்தைப் பயன்படுத்திக் […]

டிரம்புக்காக போக்குவரத்து நிறுத்தம்: அமெரிக்காவில் பிரான்ஸ் அதிபர் திணறல்!

அதிபர்டிரம்ப் வருகையை முன்னிட்டு நியூயார்க்கில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் செல்ல வழியின்றி தவித்தார். இதை அடுத்து டிரம்ப்புக்கு போன் செய்தார் மேக்ரோன்,‘உங்கள் வருகையால் சாலையை மூடி விட்டார்கள். நான் வீதியில் நிற்கிறேன்’ என்று சிரித்துக் கொண்டே கூறும் வீடியோ காட்சி இணையத்தில் வைரல் ஆகி உள்ளது.