மகளிர் உலகக் கோப்பை! முதல்முறை பட்டம் வென்ற இந்தியா!

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி அடைந்து சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை இறுதி ஆட்டம், ஞாயிற்றுக்கிழமை மாலை நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் கிரிக்கெட் திடலில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து, களமிறங்கிய இந்திய அணியின் வீராங்கனைகள் 50 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட்டுகளை இழந்து […]