சீனாவின் பிறப்பு விகிதம் சரிவு
2025இல் சீனாவின் பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவில் சரிந்துள்ளது. 1,000 பேருக்கு பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 5.6 ஆக குறைந்துள்ளது. இது 1949ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகக்குறைந்த அளவு. குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் வகையில் சீனா பல்வேறு மானியங்களை அறிவித்தாலும், அந்நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரும் சவாலை இது வெளிப்படுத்துகிறது. சீன இளைஞர்களிடையே குடும்ப வாழ்க்கையில் ஆர்வம் குறைவதற்கு, குழந்தை பராமரிப்பு மற்றும் கல்விச் செலவுகள் அதிகமாக இருப்பதும் காரணமாக பார்க்கப்படுவதால், புதுமண தம்பதிகளுக்கு பண வவுச்சர்கள் […]
70 பேர் தேசியக்கொடி வரைந்து உலகசாதனை

சென்னை கோபாலபுரத்தில் உள்ள மேனகா ஆர்ட்ஸ் அகாடமி சார்பில் 70 பேர் கொண்ட குழு உலக சாதனை நிகழ்ச்சி ஒன்றினை சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக நூலக வளாகத்தில் நிகழ்த்தியது. ரங்கோலி, கொலாஜ் மற்றும் பெயிண்டிங் என மூன்று வகைகளில் சிறுவர்கள் நடுவயதினர் பெரியவர்கள் என்று மொத்தம் 70 பேர் செங்கோட்டையில் தேசிய கொடி என்ற தலைப்பிலான வண்ண படத்தை 44 நிமிடங்கள் என்ற திட்டமிடப்பட்டு சுமார் 37 நிமிடங்கள் 21 வினாடிகளிலேயே உருவாக்கி உலக சாதனை […]
உலகின் தலைசிறந்த நிறுவனங்களின் பட்டியலில், முதல் 100 இடங்களுக்குள் இந்தியாவைச் சேர்ந்த 4 நிறுவனங்கள் பிடித்துள்ளது
46ஆவது இடத்தில் டிசிஎஸ் 47ஆவது இடத்தில் ஹெச்டிஎப்சி 73ஆவது இடத்தில் ஏர்டெல் 74 ஆவது இடத்தில் இன்போசிஸ் உள்ளது.
உலகின் நடந்து செல்லக்கூடிய நீண்ட சாலை…..

உலகின் மிக நீண்ட நடந்து செல்ல கூடிய பாதை தென் ஆப்பிரிக்க நகரம் கேப் டவுனில் இருந்து ரஷ்ய நாட்டில் மகதன் (Magadan) வரை உள்ளது. விமானங்கள் அல்லது படகுகள் தேவையில்லை, பாதையில் பாலங்கள் உள்ளன. தூரம் 22,387 கிமீ மற்றும் பயண நேரம் 4492 மணிநேரம், இடைவிடாத நடைப்பயணம் சென்றால் 187 நாட்கள் அல்லது தினமும் 8 மணி நேரம் நடந்தால் 561 நாட்கள் வழியில், 17 நாடுகள், 6 நேர மண்டலங்கள் மற்றும் ஒரு […]
உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது
மிக அரிதாக சிலருக்கு பக்கவிளைவுகள் ஏற்படும் என தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் தடுப்பூசியை திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. வணிக காரணங்களுக்காக கொரோனா தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. கொரோனா பரவலை தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தடுப்பூசிக்கான தேவை தற்போது சந்தையில் குறைந்துள்ளதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. கொரோனா திரிபுகளை எதிர்கொள்ளும் விதமாக பல்வேறு விதமான மருந்துகள் தயாரிக்கப்பட்டதால், தற்போது மருந்துகள் சந்தையில் தேங்க தொடங்கியுள்ளன. எனவே இனி […]
உலகம்:
பிரேசிலில் டெங்கு காய்ச்சலுக்கு 391 பேர் உயிரிழப்பு. ▪️ரஷ்யாவில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் 15 பேர் உயிரிழப்பு என தகவல். ▪️செங்கடலில் அமெரிக்க சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியளர்கள் ஏவுகணை தாக்குதல். ▪️சீனா நிலக்கரி சுரங்க கிடங்கு இரிந்து விழுந்து விபத்து – இதுவரை 5 பேர் உயிரிழப்பு. வெளிநாட்டு கடன்களிலிருந்து பாகிஸ்தானை மீட்போம் – பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சபதம்.
உலகளாவிய கடல்சார் இந்திய உச்சிமாநாடு 2023

மும்பையில், உலகளாவிய கடல்சார் இந்திய உச்சிமாநாடு- 2023. அக்டோபார் 17 முதல் 19 வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டிற்கான தனி அமர்வில், தமிழ்நாடு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு மாலை உரையாற்றினார். இந்த அமர்வில், சென்னை துறைமுக ஆணையம் மற்றும் காமராஜர் துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ். தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் மேலாண்மை […]
உலக புகைப்பட தினம்

பத்திரிகை புகைப்பட கலைஞர்களை புகைப்படம் எடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து. சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் இருந்த பத்திரிக்கை புகைப்படக் கலைஞர்களை முதல்வர் புகைப்படம் எடுத்தார்.
69.31 கோடி பேர் கொரோனாவால் பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனாவால் 69.31 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 66.50 கோடி பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69.06 லட்சத்தை தாண்டியுள்ளது. மேலும் 37,367 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலகின் பிரம்மாண்ட பயணக் கப்பல்

1,200 அடி நீளம், 250,800 டன் எடை கொண்ட பிரம்மாண்ட கப்பல், ‘ஐகான் ஆஃப் தி சீஸ்’, 2024ம் ஆண்டு தொடக்கத்தில் தனது முதல் பயணத்தைத் தொடங்க உள்ளது. இதில், ரிசார்ட், தீம் பார்க், பீச் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. இது, உலகின் மிகப்பெரிய கப்பலான வொண்டர் ஆஃப் தி சீஸை விட 6% பெரியது.