ஜனவரி 1 முதல் வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை!

இந்திய வங்கிகள் சங்கத்திடம் இருந்து பெறப்பட்ட முன்மொழிவின் அடிப்படையில், ஜனவரி 1 முதல் வங்கிகளில் வாரம் 5 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக அமல்படுத்த மத்திய அரசு திட்டம் இதனால் வங்கிகளின் மாத விடுமுறை 6 நாட்களில் இருந்து 8 நாட்களாக அதிகரிக்கும் என தகவல்

3 நாள் வேலை பார்த்தாலே போதும்

68 வயதான பில் கேட்ஸ், ஏ.ஐ. எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைவாய்ப்பை பறித்துவிடாது, ஆனால் வேலை பார்க்கும் முறையை முற்றிலுமாக மாற்றியமைத்துவிடும் என்று தெரிவித்துள்ளார். மனிதர்கள் கடினமாக உழைக்க வேண்டும் என்ற நிலை மாறும். அப்படியான ஒரு சமூகத்தில் ஒருவர் வாரத்திற்கு 3 நாட்கள் மட்டும் வேலை பார்த்தாலே போதுமானதாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மழைநீர் வடிகால் பணிகளை குறித்த காலத்திற்குள் தரமாக முடிக்க வேண்டும்

தாமதமாக பணிகளை மேற்கொண்டால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். பணிகள் நடக்கும் இடத்தை சுற்றி தடுப்புகள், எச்சரிக்கை பதாகைகள் வைக்க வேண்டும். ஒப்பந்ததாரர்களுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை.

100 நாள் வேலை திட்டத்தில் 18 மாநிலங்களுக்கு ரூ.6,366 கோடியை ஒன்றிய அரசு நிலுவையில் வைத்துள்ளது: மல்லிகார்ஜுன கார்கே

100 நாள் வேலை திட்டத்தில் 18 மாநிலங்களுக்கு ரூ.6,366 கோடியை ஒன்றிய அரசு நிலுவையில் வைத்துள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இவ்வாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டில் 100 நாள் வேலை திட்ட நிதியில் 33 சதவீதத்தை மோடி அரசு குறைத்திருக்கிறது என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

ஆயிரம் ஏக்கரில் அமையும் பி.எம்., மித்ரா ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா: 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசின் 51 சதவீத நிதி பங்களிப்பு, மாநில அரசின் 49 சதவீத நிதி பங்களிப்பில் 1052 ஏக்கரில் சிப்காட் நிலத்தில் ஒருங்கிணைந்த பி.எம். மித்ரா ஜவுளி பூங்கா விரைவில் அமைக்கப்பட உள்ளது. இது வந்தால் அதை சுற்றி உள்ள கிராமத்தினருக்கு சிறந்த மாற்று தொழிலாக இருப்பதுடன், அப்பகுதி பொருளாதார ரீதியாக வளர்ச்சியும் பெறும். இந்தியா முழுவதும் தமிழகம், தெலுங்கானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் ஜவுளி பூங்காக்கள் அமைக்க மத்திய அரசு […]

திருச்சியில் தண்டவாள பராமரிப்பு பணி

திருச்சியில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக, ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ஒவ்வொரு ரயிலாக அனுமதிக்கப்படுகிறது. பாண்டியன், நெல்லை, பொதிகை உள்ளிட்ட விரைவு ரயில்கள் இன்று 5 மணி நேரம் தாமதமாக இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. திருச்சி -திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் 2 மணி நேரம் தாமதமாக புறப்படும் என்றும் சென்னை எழும்பூர் -திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரயில், 2 மணி நேரம் தாமதமாக இன்று காலை 9.15 மணிக்கு புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

தாம்பரம் மாநகராட்சியில் 37.5 கோடி மதிப்பீட்டில் 12.5 கி.மீ மழைநீர் வடிகால் பணிகள்

தாம்பரம் மாநகராட்சியில் 37.5 கோடி மதிப்பீட்டில் 12.5 கி.மீ மழைநீர் வடிகால் பணிகளை தாம்பரம் மாநகராட்சி வெள்ளத்தடுப்பு சிறப்பு அலுவலர் ஆ.ஜான்லூயிஸ் நேரில் பாவையிட்டு குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க உத்திரவு. தாம்பரம் மாநகராட்சிகுட்பட்ட பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மழை வெள்ளத்தை தடுக்கும் விதமாக 37.5 கோடி மதிப்பீட்டில் 12.5 கி.மீ நிலத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்றுவருகிறது. இதனை தாம்பரம் மாநகராட்சிகான வெள்ளத்தடுப்பு சிறப்பு அலுவலர் ஆ.ஜான்லூயிஸ் ஐ.ஏ.எஸ், தாம்பரம் மாநகராட்சி […]

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இரண்டு பேரை பணியிடமாற்றம் செய்துதலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா உத்தரவு பிறப்பித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது நகராட்சி நிர்வாக இயக்குனராக இருந்து வந்த பொன்னையா ஊரக வளர்ச்சிதுறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.வருவாய்துறை இணை ஆணையராக இருந்து வந்த சிவராசு நகராட்சி நிர்வாக இயக்குனராக பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.