வயநாடு விபத்து நூறு குடும்பங்களுக்கு வீடு வைக்க இடம் தருகிறார் கேரளா நகைக்கடை அதிபர் போபி

செம்மண்ணூர்…. மேலும் வயநாடு பகுதி வியாபாரிகள் ,வெளி மாவட்ட வணிகர்கள் , மற்றும் வெளிமாநில வணிகர்கள் நிதி உதவிகள், அள்ளி தருகிரார்கள்.ஆனால் அமேசான்… ஃபிலிப் கார்ட் ….ச்விகி…. போன்ற ஆன்லைன் வர்த்தகர்களிடம் இருந்து எந்த உதவியும் இல்லை……சிந்தியுங்கள் சொற்ப லாபத்திற்கு நாம் உள்ளூர் வணிகர்களை மறந்து ஆன்லைன் வர்த்தகத்திற்கு ஆதரவு தராதீர்கள்….. நம்மில் ஒருவனாக இருக்கும் நம்மோடு சேர்ந்து இருக்கும் உள்ளூர் வணிகர்களுக்கு ஆதரவு நல்குவோம்… “ஆன்லைன் வர்த்தகம் ஒழிப்போம் உள்ளூர் சில்லறை வர்த்தகம் காப்போம்”..
வயநாடு நிலச்சரிவு: அடையாளம் தெரியாத 67 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம்

திருவனந்தபுரம், கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த மாதம் 30-ந் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பூஞ்சிரித்தோடு, முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை ஆகிய கிராமங்கள் சின்னாபின்னமாகின. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் ராணுவம் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ரேடார் கருவிகள், செல்போன் ஜிபிஎஸ் ஆகியவற்றை பயன்படுத்தி காணாமல் போனவர்களை மீட்புக் குழுவினர் தேடி வருகிறார்கள். நிலச்சரிவில் சிக்கி இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 370-ஆக உயர்ந்துள்ளது. 34 பெண்கள், 36 ஆண்கள், 11 குழந்தைகள் என 81 […]
வயநாடு நிலச்சரிவில் பலியானவர்களுக்கு மக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பில் குரோம்பேட்டை பஸ் நிலையம் அருகே மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி அஞ்சலி செய்யப்பட்டது

சமூக சேவகர் வி.சந்தானம் தலைமை ஏற்றார். மீனாட்சிசுந்தரம், அட்வகேட் ராமதாஸ், ராமசுப்பு, மோகன், ராமகிருஷ்ணன், பழனி, சேது, தேவராஜ் கிருஷ்ணமூர்த்தி, தன்ராஜ், சிராஜ் ஆகியோர் பங்கேற்றார்கள்.
3 நாட்களுக்கு இலவச டேட்டா

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்களில், Validity நிறைவடைந்து ரீச்சார்ஜ் செய்ய முடியாதவர்களுக்கு 3 நாட்களுக்கு 1GB மொபைல் டேட்டா, Unlimited Calls, 100 SMS இலவசமாக வழங்கப்படும் என அந்நிறுவனம் அறிவிப்பு. Postpaid வாடிக்கையாளர்கள் தங்கள் கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசம் 30 நாட்களுக்கு நீட்டிப்பு எனவும் அறிவிப்பு.
“பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்வி தொடர நடவடிக்கை”

கேரளா வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்வியை தொடர நடவடிக்கை. வீடுகளை இழந்த மக்களை தொடர்ந்து முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மோசமான வானிலை நிலவுவதால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ யாரும் நேரில் வர வேண்டாம். இறந்தோரின் உடல்களை பெற குடும்பத்தில் ஓரிருவர் மட்டுமே வந்தால்போதும் – கேரள முதல்வர் பினராயி விஜயன். வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
வயநாட்டில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மீட்புக் குழுவினரிடம் மீட்புப் பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.
வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 270ஆக அதிகரிப்பு

மீட்பு பணியில் தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் தீயணைப்பு துறையினர் தீவிரம் தோண்ட தோண்ட உடல்கள் கிடைப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க கூடும் என அச்சம் மீட்பு பணிகள் மேலும் ஒருவார காலம் நீடிக்கும் என அதிகாரிகள் தகவல்
கேரள சட்டப்பேரவையில் அரைக்கம்பத்தில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி

வயநாடு நிலச்சரிவில் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததையடுத்து, கேரளாவில் இரண்டு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் நிலையில், கேரள சட்டப்பேரவையில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் ஏற்றப்பட்டுள்ளது.
வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கை

கேரளாவில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மழை தொடரும் பட்சத்தில் வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவை இயற்கை விடுத்துள்ள எச்சரிக்கையாகவே பார்க்க வேண்டும் என வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
வயநாட்டில் தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் குழு

வயநாட்டில் நிவாரண பணிகளை மேற்கொள்ள தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் குழு கேரளா விரைவு