கேரளா: கனமழை காரணமாக பெருங்கல் குத்து அணை நிரம்பியதால் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது

காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் கரையோரங்களில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது
தென்காசி: குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு குறைந்த நிலையிலும் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது

பழைய குற்றாலத்தில் நேற்று ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிறுவன் உயிரிழந்த நிலையில், அந்த அருவிக்கு செல்லும் சாலை மூடப்பட்டுள்ளது.
சற்று முன் அதிர்ச்சி தகவல்

பழைய குற்றாலம் அருவியில் வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் நெல்லையை சேர்ந்த அஸ்வின் ( வயது 17) உயிரிழந்த நிலையில் உடல் மீட்பு