எல்லையில் பதற்றம் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் 10 விமானங்கள் ரத்து

தீவிரவாதிகள் முகாம்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து விமான சேவைகளுக்கு கட்டுப்பாடுசென்னையிலிருந்து மும்பை, சண்டிகர், சிவமொக்கா செல்ல வேண்டிய 5 விமானங்கள் ரத்து சென்னைக்கு வர வேண்டிய 5 விமானங்களையும் ரத்துசெய்த அதிகாரிகள்

இஸ்ரேல் தீவிர தாக்குதல்: கடந்த 24 மணி நேரத்தில் 46 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் தகவல்

இஸ்ரேல் தாக்குதலில் 46 பேர் கொல்லப்பட்டதுடன், 85 பேர் காயமடைந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.பெய்ரூட், லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வான்வழி தாக்குதலை நடத்தி வந்த இஸ்ரேல் நேற்று முன்தினம் அங்கு தரைவழி தாக்குதலை தொடங்கியது. இஸ்ரேலின் எல்லைக்கு அருகில் உள்ள கிராமங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் தாக்குதலை தொடங்கி இருப்பதாகவும், சூழலுக்கும், தேவைக்கும் ஏற்ப இந்த ராணுவ நடவடிக்கை முன்னெடுத்துச் செல்லப்படும் என்றும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. இந்த […]

சரியான பதிலடி கொடுக்கப்படும் ஈரானுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை: ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து எதிர்தாக்குதலுக்கு தயாராகிறது; மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடிப்பு

ஜெருசலேம்: தங்கள் நாட்டின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி மிகப்பெரிய தவறை செய்த ஈரான் அதற்காக மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டுமெனவும், அவர்களுக்கு சரியான நேரத்தில் சரியான பதிலடி தரப்படும் என்றும் இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதோடு, அடுத்த கட்ட தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருவதால் மத்திய கிழக்கில் உச்சகட்ட போர் பதற்றம் நிலவுகிறது. இஸ்ரேலின் எதிர்தாக்குதலை எதிர்கொள்ள ஈரானும் தயார் நிலையில் இருப்பதாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் போராளிகள் […]

லெபனான் மீது இஸ்ரேல் விமானப்படைகள் தாக்குதல் நடத்தியதில் 187 பேர் பலி: 700-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

ஈரான் ஆதரவு ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா அமைப்பினரின் 300 இடங்களை குறித்து வைத்து இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் 12-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள், தெற்கு லெபனான் பகுதியில் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 187-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் […]

மத்திய கிழக்கில் போர் மூளும் அபாயம்!

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது நேரடி ராணுவ தாக்குதல் நடத்த ஈரான் உயர் தலைவர் அலி காமெனி உத்தரவு லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி உயிரிழந்ததால் போர் பதற்றம் இதனிடையே, இந்திய குடிமக்கள் லெபனான் நாட்டுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு இந்திய வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தில் தற்காலிக முகாம்கள் மீது இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்

கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் படையினர் அங்கிருந்த 1,200 பேரை சுட்டு கொன்றனர். 250 பேரை பணய கைதிகளாக பிடித்து சென்றனர். இதை தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஹமாஸ் படைகளும் அவ்வப்போது பதிலடி கொடுத்து வருகிறது.இந்நிலையில் இஸ்ரேலின் வர்த்தக மையமான டெல் அவிவ் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக நேற்று ஹமாஸ் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் […]

இஸ்ரேல்- ஹமாஸ் யுத்தம் தொடங்கியதிலிருந்து 23157 பாலஸ்தீனர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்

அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய யுத்தம் இன்னும் முடியவில்லை.காசா மற்றும் மேற்கு கரையோர பகுதிகளிலும் பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள்.தற்போது தெற்கு காசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் தீவிரமாகியுள்ளது

போர் நிறுத்த தீர்மானம் நிறைவேற்றம்

காசாவில் மனிதாபிமான போர் நிறுத்தம், பணயக்கைதிகளை விடுவித்தல், மனிதாபிமான அணுகலை உறுதி செய்தல் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றம். இந்த தீர்மானத்திற்கு இந்தியா உள்ளிட்ட 153 நாடுகள் ஆதரவாகவும்; 10 நாடுகள் எதிராகவும் வாக்களித்துள்ளன; 23 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை

இஸ்ரேல் ஹமாஸ் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது

இந்திய நேரப்படி இன்று மாலை 7:30 மணிக்கு முதல் கட்ட பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். காசாவில் இருந்து முதல் நாளான இன்று 13 பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுகிறார்கள். 4 நாட்களில் 50 பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் முடிவு.