கோவில் சுவர் இடிந்து விழுந்து 9 குழந்தைகள் பலி: நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி

புதுடெல்லி:மத்திய பிரதேசத்தில் கனமழை பெய்து வருவதால் சுவர் இடிந்து விழும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இங்கு இந்த ஆண்டு மட்டும் மழை தொடர்பான சம்பவங்களில் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில், ம.பி.யின் ஷாபூரில் உள்ள ஹர்தௌல் பாபா கோவிலின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 9 குழந்தைகள் உயிரிழந்தனர்.விபத்தில் காயமடைந்த குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ம.பி.யில் நடந்த விபத்து எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. […]
கனமழை எதிரொலி கார் விற்பனை மைய சுவர் இடிந்தது

இரவு பெய்த கனமழையால் கோவிலம்பாக்கத்தில் டாடா கார் விற்பனை மையம் சுற்றுசுவர் சாலையில் விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிப்பு இரவு சென்னை புறநகர் பகுதியுல் சூறாவளி காற்றுடன் கன மழை பெய்த நிலையில் கோவிலம்பாக்கத்தில் டாடா கார் விற்பனை நிலைய பின்பக்கத்தில் 6 உயரம், 60 நிலமுள்ள சுற்றுசுவர் அடியோடு பெயந்து அருகில் உள்ள சாலையில் விழுந்தது. இதனால் அந்த சாலையில் வாகன போக்குவரத்து தடைபட்டுள்ளது. கோவிலம்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் இதுவரை அகற்றும் பணியில் ஈடுபடவில்லை.
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட ஜி.எஸ்.டி. சாலையின் சுவர்களில் வண்ண ஒவியங்கள் அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன
ஸ்ரீரங்கம் கோயிலில் கிழக்கு கோபுரம் முதல் நிலையில் உள்ள சுவர் இடிந்து விழுந்தது

நள்ளிரவு 1.50 மணிக்கு இடிந்து விழுந்ததால் பெரிய அளவில் சேதம் தவிர்ப்பு கிழக்கு வாசலில் நுழைவு கோபுரத்தின் முதல் நிலை மற்றும் 2வது நிலை சுவர்கள், சில தினங்களாக விரிசல் ஏற்பட்டு இருந்தன. விரிசல் அதிகமான நிலையில் முதல் நிலை கோபுரத்தின் சுவர், மளமளவென இடிந்து விழுந்தது. நள்ளிரவில் சுவர் இடிந்து விழுந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
ஜி.எஸ்.டி, சாலையின் சுவர்களில் வண்ண ஓவியங்கள்

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட குரோம்பேட்டை, ஜி.எஸ்.டி, சாலையின் சுவர்களில் வண்ண ஓவியங்கள் வரைந்து அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.