குரோம்பேட்டை ஜிஎஸ்டி ரோட்டில் உள்ள எஸ்கலேட்டர் பழுதாகி உள்ளது. கடந்த ஒரு மாதமாக அது பழுது பார்க்கப்பட வில்லை. நெடுஞ்சாலைத்துறை பழுது பார்க்காததை கண்டித்து குரோம்பேட்டை மக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பில் கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

அதன் தலைவர் வி. சந்தானம், போலீஸ் கிருஷ்ணமூர்த்தி, வணிகர் சங்க தலைவர் ராமகிருஷ்ணன், அர்கீஸ்வரர் காலனி நலச் சங்கத்தின் செயலாளர் தன்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டு முழக்கம் எழுப்பினர்.
ஆசிரியர் தின விழாவையொட்டி குரோம்பேட்டை மக்கள் விழிப்புணர்வு சங்கம் ஸ்ரீ அய்யாசாமி ஐயர் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று அங்குள்ள ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி இனிப்பு வழங்கி கௌரவித்தனர்

10, 12-ம் வகுப்பில் அய்யாசாமி பள்ளி 100% தேர்ச்சி விகிதம் பெற்று சாதனை பெற்றதை பாராட்டி விருதும் வழங்கப்பட்டது. பிறகு ரீடிங்டன் லிமிடெட் கம்பெனி பள்ளிக்கு 20 டேபிள்களும் 60 சேர்களும் இலவசமாக வழங்கப்பட்டது. அந்த கம்பெனியின் நிர்வாகி வெங்கடாச்சாரி இந்த உதவியை செய்தார். மக்கள் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் சந்தானத்தின் தலைமையிலும் தாளாளர் மனோகரன் முன்னிலையிலும் நடந்தது. மேலும் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி விகிதம் பெற்றதற்கு விருது வழங்கினர்.
சமூக ஆர்வலர் சந்தானத்தை பாராட்டுவோம்

சென்னை குரோம்பேட்டை, பல்லாவரம் மற்றும் தாம்பரம் பகுதிகளில் அனைவராலும் நன்கு அறியப்பட்ட 86 வயது முதியவர் ஒருவர் உள்ளார். அவர் பெயர் வி.சந்தானம் அவரை அறியாதவர்கள் இந்தப் பகுதிகளில் இல்லை என்றே சொல்லலாம். மனுக்களை எழுதி எழுதி அவரது விரல்கள் தேய்ந்தேபோய் இருக்க வேண்டும். எந்த உயரதிகாரியையும் அவர் விட்டு வைக்கமாட்டார். ‘சில்வண்டு’ போல குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருப்பார். அவர் வாழ்க்கையே புகார் மனு, கோரிக்கை மனு, தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்று போய்க் […]
வயநாடு நிலச்சரிவில் பலியானவர்களுக்கு மக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பில் குரோம்பேட்டை பஸ் நிலையம் அருகே மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி அஞ்சலி செய்யப்பட்டது

சமூக சேவகர் வி.சந்தானம் தலைமை ஏற்றார். மீனாட்சிசுந்தரம், அட்வகேட் ராமதாஸ், ராமசுப்பு, மோகன், ராமகிருஷ்ணன், பழனி, சேது, தேவராஜ் கிருஷ்ணமூர்த்தி, தன்ராஜ், சிராஜ் ஆகியோர் பங்கேற்றார்கள்.
சேவாரத்தனா டாக்டர் வி சந்தானம் அவர்களுக்கு பாராட்டு விழா

காயிதே மில்லத் கல்லூரி மேடவாக்கம் சேவா ரத்னா டாக்டர் வி. சந்தானம் 45 ஆண்டுகால சேவையை பாராட்டி மற்றும் பசுமை இந்தியா விருதை பெற்ற அவரை காயிதே மில்லத் கல்லூரி செக்ரட்டரி தாவூத் மியா கான் சால்வை அணிவித்து காயிதே மில்லத் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை பரிசாக அளித்து பாராட்டிப் பேசினார்கள். இந்த நிகழ்ச்சியில் சந்தானம் குடும்பத்தினரும் மக்கள் விழிப்புணர்வு சங்கத்தின் முன்னணி சமூக ஆர்வலர்களும் பங்கேற்றார்கள். அது தவிர கல்லூரியின் மாணவர்கள் கல்லூரி ஆசிரியர்கள் பங்கேற்றார்கள்.
பாதாள சாக்கடைக்காக போராட்டம்

குரோம்பேட்டை முத்துசாமி நகர், ஆர்.கே.நகர், கணேஷ் நகர், சோமு நகர், கண்ணம்மாள் நகர் இப்பகுதிகளில் பாதாள சாக்கடை வசதி செயல்படாமல் உள்ளது. 2012 ஆம் ஆண்டு இங்கு பல லட்சம் செலவில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டாலும் அதற்குரிய பம்பிங் ஸ்டேஷன் உருவாக்கப்பட்டு அது செயல்படாமல் இருக்கிறது. இதன் காரணமாக பாதாள சாக்கடையை பயன்படுத்த முடியவில்லை.இது அந்த பகுதி மக்களிடையே பெரும் சிரமத்தை கொடுத்துள்ளது. இந்த பிரச்சனை தொடர்பாகவும் மற்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரியும் மக்கள் விழிப்புணர்வு […]