சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில், மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை திறப்பு விழா

சிலையை முதல்வர் ஸ்டாலின், உ.பி.,முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் திறந்து வைத்தனர். வி.பி.சிங் மனைவி சீத்தாகுமாரி, மகன்கள் அஜய்சிங், அபய் சிங் உள்ளிட்டோர் பங்கேற்பு மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு மாநிலக் கல்லூரியில் ரூ.52 லட்சம் மதிப்பில் சிலை வி.பி.சிங் சிலை திறப்பு விழாவில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்பு
வி.பி.சிங் – நினைவு நாள்

எத்தனையோ வட இந்தியத் தலைவர்களை தமிழக மக்கள் அவர்களின் பெயர்களைத் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டி மகிழ்ந்தனர். ஆனால் அந்தத் தலைவர்களெல்லாம் தமிழர்களை எந்த அளவிற்கு நேசித்தார்கள் என்பதையோ அல்லது அவர்கள் எப்படி தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தார்கள் என்பதையோ நாம் கண்கூடாக அறிந்ததில்லை. ஆனால் வி.பி.சிங் ஒருவர்தான் தமிழர்களின் இதயத்தோடு மட்டுமல்லாமல் உணர்வுகளோடும் உரிமைகளோடும் ஒன்றாய் இணைந்தவர். வி.பி.சிங் அரசியலின் அதிசயம். அவரை நினைவில் கொள்வோம். இன்னும் அறிய https://www.aanthaireporter.in/kalaignar-of-indian-politics-v-p-singh-memoirs/