தமிழ்நாடு தேர்தல் ஆணைய அறிவிப்பு!

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால், வாக்காளர் பட்டியலை வீட்டுக்கு வீடு சரிபார்க்கும் பணி, கடந்த மாதம் 21-ந் தேதி முதல் தொடங்கப்பட்டு வரும் 21-ந் தேதி வரை நடைபெறும். வாக்காளர்கள் தங்கள் விவரங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க மற்றும் புதிய வாக்காளர்களை இணைக்க விரும்பினால், அவரவர் வீட்டிற்கு வரும் அலுவலர்கள் மூலமாக செய்துக் கொள்ளலாம். எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்

வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள விரும்புவோர் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 30 வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு அறிவித்துள்ளார். இக்காலகட்டத்தில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். 2024 ஜனவரி 1ஆம் தேதியன்று 18 வயது பூர்த்தியடைபவர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வீடுவீடாக வந்து வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் […]