செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏழு லட்சம் வாக்காளர் நீக்கம்

செங்கல்பட்டு மாவட்​டத்​தில் தாம்​பரம், பல்​லா​வரம், சோழிங்​கநல்​லூர், மது​ராந்​தகம், செய்​யூர், செங்கல்பட்டு, திருப்​போரூர் ஆகிய 7 சட்​டப்​பேரவை தொகுதிகள் உள்ளன. மொத்​த​முள்ள 27,87,362 வாக்​காளர்​களில் 7,01,901 வாக்​காளர்​களின் பெயர்​கள் நீக்​கப்​பட்​டுள்​ளன. இரட்​டைப் பதிவு, இறந்​தவர்​கள் மற்​றும் இடம்​பெயர்ந்த வாக்​காளர்​களின் பெயர்​கள் நீக்​கப்​பட்​ட​தால், வாக்​காளர் எண்​ணிக்கை 20,85,464 ஆகக் குறைந்​துள்​ளது. இது மொத்த வாக்​காளர்​களில் 25.18% ஆகும்.

வாக்கு எண்ணும் பணியில் 38,500 பேர் ஈடுபடுவர்-சத்யபிரத சாகு

தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியில் 38,500க்கும் மேற்பட்டோர் ஈடுபடுவர். அனைத்து மையங்களிலும் வாக்கு எண்ணிக்கைக்கு 3,300 மேஜைகள் அமைக்கப்பட உள்ளன காலை 8 மணிக்கு தபால் வாக்கு, 8.30 மணிக்கு மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். ஒவ்வொரு மேஜையிலும் வாக்கு எண்ணும் பணி கேமராவில் பதிவு செய்யப்படும் – தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு.

செம்பாக்கம் வடக்கு பகுதியில் பள்ளிகளில் உள்ள வாக்கு சாவடிகளில் வாக்கு பதிவு நடைபெறுவதை ‌செம்பாக்கம் வடக்கு பகுதி செயலாளர் ஏ.கே.கருணாகரன், மாநில தகவல் தொழில் நுட்ப அணி துணை செயலாளர் அ.தமிழ்மாறன் ஆய்வு செய்தனர்

அருகில் சரண்யா மதுரைவீரன் எம்.சி, வட்ட செயலாளர் க.ரமேஷ், உடன் இளைஞரணி, தகவல் தொழில் நுட்ப அணி, மாணவரணி கலந்து கொண்டனர்.