இலங்கை செல்ல இன்று முதல் விசா தேவையில்லை

இலங்கைக்கு சுற்றுலா செல்வதற்கான இலவச விசா நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்தியா உட்பட 35 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்கு விசா இல்லாமல் இன்று முதல் பயணிக்கலாம்.

விசா கட்டணத்தை இரு மடங்கு உயர்த்திய ஆஸ்திரேலியா

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணத்தை சுமார் இரு மடங்காக உயர்த்தியுள்ளது ஆஸ்திரேலியா. இந்தக் கட்டண உயர்வு (ஜூலை 1) முதல் அமலுக்கு வருவதாகவும் அந்த நாடு தெரிவித்துள்ளது. அந்நாட்டின் வீட்டு வசதி துறையில் கடுமையான நெருக்கடி நிலை நீடித்து வருவதாக தகவல். இதற்கு காரணம் வெளிநாடுகளில் இருந்து குடியேறுபவர்கள் எனச் சொல்லப்படுகிறது. அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நகர்வை ஆஸ்திரேலியா முன்னெடுத்துள்ளது

மலேசியா செல்ல விசா தேவை இல்லை

சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில், இந்தியா சீனாவில் இருந்து வருபவர்களுக்கு விசா தேவையில்லை; 30 நாட்கள் வரை தங்கியிருக்கலாம் என மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.