விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையில் இரு நாட்களுக்கு முன்பு, போராட்டத்தில் பெண் டி.எஸ்.பி. தாக்கப்பட்ட சம்பவத்தில் தலை மறைவாக இருந்த மேலும் ஒருவர் கைது

ஏற்கனவே 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பட்டியை சேர்ந்த முருகேசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விஜயபிரபாகர் திட்டமிட்டு சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டுள்ளார், வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி எனவும் பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு

விருதுநகரில் விஜயபிரபாகர் தோல்வியடையவில்லை, தோற்கடிக்கப்பட்டுள்ளார் – பிரேமலதா விஜயகாந்த். மிக மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே விஜய பிரபாகர் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார். 2 மணி நேரம் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தியது ஏன்? எனவும் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகர திமுக சார்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் திருத்தங்கல்லில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட பிரபல திரைப்பட நடிகர் போஸ் வெங்கட் பேசுகையில், ‘‘ஒன்றிய பாஜ ஆட்சியில் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு ஏழை மக்களை பெரிதும் பாதித்துள்ளது. கலவரத்தை தூண்டி அதன் மூலம் அரசியல் ஆதாயம் பெற்றவர் பிரதமர் நரேந்திரமோடி. பாஜவினர் செல்போன் மூலம் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.பிரதமர் மோடி கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றி தர மாட்டார். வரும் நாடாளுமன்ற […]

விருதுநகர்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனின் தாயார் அமராவதி அம்மாள் (94), வயது மூப்பு காரணமாக இன்று அதிகாலை காலமானார்

அவரது உடலுக்கு சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் ஆகியோர் அஞ்சலி

தமிழகம் சாத்தூர் அருகே சாலை விபத்தில் கணவர் கண் முன்னே மனைவி, 2 குழந்தைகள் உயிரிழப்பு..!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சாலை விபத்தில் கணவர் கண் முன்னே மனைவி, 2 குழந்தைகள் உயிரிழந்தனர். நல்லிசத்திரம் என்ற இடத்தில் கார் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.

ஆயிரம் ஏக்கரில் அமையும் பி.எம்., மித்ரா ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா: 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசின் 51 சதவீத நிதி பங்களிப்பு, மாநில அரசின் 49 சதவீத நிதி பங்களிப்பில் 1052 ஏக்கரில் சிப்காட் நிலத்தில் ஒருங்கிணைந்த பி.எம். மித்ரா ஜவுளி பூங்கா விரைவில் அமைக்கப்பட உள்ளது. இது வந்தால் அதை சுற்றி உள்ள கிராமத்தினருக்கு சிறந்த மாற்று தொழிலாக இருப்பதுடன், அப்பகுதி பொருளாதார ரீதியாக வளர்ச்சியும் பெறும். இந்தியா முழுவதும் தமிழகம், தெலுங்கானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் ஜவுளி பூங்காக்கள் அமைக்க மத்திய அரசு […]

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூரத் திருவிழாவில் ஐந்து கருடசேவை கோலாகலமாக நடைபெற்றது.