விநாயகர் ஓவியம்

குரோம்பேட்டை நெமிலிச்சேரில் வசிக்கும் கண்ணியப்பன் வரைந்த விநாயகர் ஓவியத்தை செந்தில் விநாயகர் ஆலயத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைத்தார். இதைபோல பல பிரபலங்கள் படங்களை வரைந்து அவர்களின் பாராட்டை பெற்றார்.
விநாயகர் சஷ்டி விரதம்
இவ்விரதம் கார்த்திகை மாதம் வளர்பிறை பிரதமை முதல் தொடங்கி மார்கழி மாதம் வளர்பிறை சஷ்டி வரை மொத்தம் 21 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்விரத முறையில் ஆண்கள் வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் 21 இழைகளாலான காப்பினைக் கட்டிக் கொள்கின்றனர்.முதல் 20 நாட்களும் ஒரு வேளை மட்டும் உணவினை உட்கொள்கின்றனர் விரதமிருப்போர் கடைசிநாள் முழுஉபவாசம் மேற்கொள்கின்றனர். விரதத்தின் நிறைவு நாள்அன்று பலவிதமான உணவுப்பொருட்களை தானமாகக் கொடுப்பர். இவ்விரதத்தின் பலனாக நல்ல வாழ்க்கைத்துணை, நற்புத்திரப்பேறு ஆகியன கிடைக்கும்.
விநாயகர் சதுர்த்தி பூஜை செய்வது எப்படி?

விநாயகர் சதுர்த்தி தினத்தன்று மண் அல்லது சந்தனத்தால் செய்யப்பட்ட விநாயகரை வைத்து வழிபாடு செய்ய வேண்டும். படமும் வைத்துக்கொள்ளலாம். வாசலில் கோலமிட்டு மாவிலை, வாழை தோரணம் கட்ட வேண்டும். பச்சரிசியை பரப்பி, அதில் விநாயகப் பெருமானின் களி மண் சிலையை வைக்க வேண்டும்.விநாயகரின் திரு மேனியில் வெடிப்பு, விரிசல், குறை ஏதும் இல்லாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். நிவேதனமாக அவல், பொரி, கடலை, கொழுக்கட்டை, சுண்டல் என்று படையல் செய்தல் வேண்டும். விநாயகர் துதிகளான சீதக்களப என […]
விநாயகர் சதுர்த்தி பிறந்த கதை

முன்னொரு காலத்தில் சிவபெருமானின் பக்தனான கஜமுகாசுரன் என்பவன் வரம் பல பெற்றமையால் இறுமாப்புக் கொண்டு தேவர்களைப் பல வழிகளிலும் துன்புறுத்தி வந்தான். அவன் தன்னை மனிதர்களாலோ, விலங்குகளாலோ, ஆயுதங்களாலோ யாரும் கொல்ல முடியாதபடி வரம் பெற்று இருந்ததால் தேவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறினர்.எனவே அனைத்து தேவர்களும் ஒன்றாக திரண்டு சிவபெருமானிடம் சரண் அடைந்தனர். இதனால் அவர் ஆவணி மாத சதுர்த்தி அன்று விநாயகரை யானை முகத்தோடும், மனித உடலோடும் படைத்து கஜமுகாசுரனை அழிக்க அனுப்பி […]
சிட்லபாக்கத்தில் 20000 விநாயகர் சிலை கண்காட்சி

குரோம்பேட்டையை சேர்ந்தவர் கட்டிட கலை நிபுணர் சீனிவாசன் தீவிர விநாயகர் பக்தரான இவர் 17 ஆண்டாக ஆயிரகணக்கான விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி நடத்தி வருகிறார். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் கணேஷ் மகாலில் அரை அங்குலம் முதல் ஆறு அடிவரையிலான, விநாயர்கர் சிலைகள், மண் சிற்பங்கள், தங்கம், வெள்ளி, பவளம், பல்வேறு அறிய படங்கள் என 20 ஆயிரம் விநாயகர்களை கண்காட்சியாக மூன்று அடுக்கு கட்டிடன் முழுவதும் காட்சி படுத்தியுள்ளார். இந்த […]
பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து தேவையில்லாத சட்டம், ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடாது ..

சிலை வைக்கப்படும் பகுதியில் சீருடைப்பணியில் உள்ள காவல்துறையினர் சிலைகளைப் பாதுகாக்க இரவு பகலாக பணி செய்ய வேண்டி உள்ளது. இதெல்லாம் தேவையா?, சாதாரண ஒரு விஷயத்தை ஏன் இப்படி பெரிதாக்கிக் கொள்கிறீர்கள் ,சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை!
விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மாசு கட்டுப்பாடு வாரியம்!

சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் மட்டும் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே கரைக்க அனுமதி
செப்டம்பர் 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறை

தமிழக அரசு ஏற்கனவே செப்டம்பர் 17ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறை என்று அறிவித்திருந்தது. தற்போது பல்வேறு கோயில்களில் விநாயகர் சதுர்த்தி 18ஆம் தேதி கொண்டாடப்படுவதை தொடர்ந்து செப்டம்பர் 18ஆம் தேதி அரசு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை தொடர்ந்து திங்கட்கிழமையும் விநாயகர் சதுர்த்தி விடுமுறையாக கிடைக்கிறது