ஏரிகள் உடைப்பு தத்தளிக்கும் விழுப்புரம்; ரயில்கள் பாதியில் நிறுத்தம்; பயணிகள் அவதி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியதால் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது. பயணிகளை அழைத்து வர சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டத்தில், திண்டிவனம் பகுதியில் மட்டும் அதிகபட்சமாக 37 செ.மீ. அளவிற்கு மழை கொட்டித்தீர்த்தது. இதனால் திண்டிவனம் பழைய பஸ் நிலையத்தையொட்டியுள்ள ஏரியில் உடைப்பு ஏற்பட்டு மழை நீர் வெள்ளம் போல் கரை புரண்டோடியது. இதில் பஸ் நிலையத்தையொட்டி,கிடங்கல் பகுதிக்கு செல்லும் தரைப்பாலம் அடியோடு அடித்து […]
புதுச்சேரி, விழுப்புரத்தில் வரலாறு காணாத மழை: ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளால் மக்கள் தவிப்பு

புதுச்சேரி / விழுப்புரம்: ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த புதுச்சேரி, விழுப்புரம் பகுதியில் வரலாறு காணாத அதிகனமழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 51 செ.மீ., புதுச்சேரியில் 49 செ.மீ. மழை பெய்துள்ளது. திங்கள்கிழமையைப் பொறுத்தவரையில், 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் கூறியது: “தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஃபெஞ்சல் புயல், […]
விழுப்புரம், புதுச்சேரியை புரட்டிப் போட்ட கனமழை: மயிலத்தில் 51 செ.மீ. கொட்டியது

ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழை, வெள்ளத்தால் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த நெ.பில்ராம்பட்டு கிராமத்தில் தற்காலிக தரைப்பாலம் துண்டிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி: ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தின் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களும், புதுச்சேரியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் அதிகபட்சமாக 51 செ.மீ. மழை கொட்டியதால், பல பகுதிகள் வெள்ளக்காடாகின. பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவத்தினர், தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் 30-ம் தேதி மாலை […]
சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூரில் நாளை (நவ.30) அதி கனமழைக்கான ரெட் அலர்ட்-வானிலை ஆய்வு மையம். சென்னை முதல் காரைக்கால் வரை இன்று, மணிக்கு 70 கி.மீ வேகம் வரை தரைக்காற்று வீசக்கூடும். நாளை வட கடலோர மாவட்டங்களில் மணிக்கு 90 கி.மீ வரை சூறைக்காற்று வீசக்கூடும் எனவும் கணிப்பு.
விழுப்புரம் அருகே ரூ.5 லட்சம் மதிப்பிலான 3,000 மதுபாட்டில்கள் பறிமுதல்

விழுப்புரம் அருகே தென்னமாதேவியில் ரூ.5 லட்சம் மதிப்பிலான 3,000 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வைக்கோல் ஏற்றிச்சென்ற லாரியில் மது பாட்டில்களை கடத்திச்சென்ற பழனி என்பவரை பிடித்து விசாரணை நடைபெற்று வருகிறது
சந்திராயன் -3க்கு பெருமை சேர்க்கும் தமிழர்

விழுப்புரம்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில், விழுப்புரத்தை சேர்ந்தவர், ‘சந்திரயான்-3’ திட்ட இயக்குனராக பொறுப்பேற்றுள்ளார். விழுப்புரத்தை சேர்ந்தவர் பழனிவேல் மகன் வீர முத்துவேல், 42; விஞ்ஞானி. இஸ்ரோவின் சந்திரயான்-3 திட்டத்தை இயக்கப்போகும் திட்ட இயக்குனர் பொறுப்பை ஏற்றுள்ளார். இவர் தற்போது, குடும்பத்துடன் பெங்களூருவில் வசிக்கிறார். இவரது தந்தை பழனிவேல், ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர். தற்போது, எஸ்.ஆர்.எம்.யூ., தொழிற்சங்க, மத்திய செயல் தலைவராக உள்ளார். தாய் ரமணி, குடும்பத் தலைவி. இவர்கள் இருவரும் விழுப்புரத்தில் வசிக்கின்றனர். விழுப்புரத்தில் உள்ள […]