கிராம உதவியாளர்களை நியமிக்க அரசாணை வெளியீடு!

3 ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு, மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய்த்துறை செயலாளர் உத்தரவு! ₹11,100 – ₹35,100 என்ற ஊதிய விகிதத்தில் பணியிடங்களை நிரப்பவும் அரசாணை வெளியீடு. 2022ம் ஆண்டு நிலவரப்படி மாநிலம் முழுவதும் 5,060 பணியிடங்கள் காலியாக உள்ளன
கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காலி கிராமத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 13 பேர் கைது

கோவில் புதுப்பிப்பு பணியின் போது வெடித்த மோதலால் ஆதி திராவிட குடியிருப்புக்குள் புகுந்து வீடுகளுக்கு தீ வைப்பு. ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு. இரு பிரிவுகளைச் சேர்ந்த 23 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் 13 பேர் கைது.
நாகை அடுத்த நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் இரு பிரிவினருக்கு இடையே மோதல்!

நாகை – நாகூர் சாலையை மறித்து போராட்டம். கற்கள், கட்டைகளை கொண்டு ஒருவரையொருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு. போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்து வருகின்றனர்.