இந்தியாவில் உள்ள மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக விக்ரம் மின்உற்பத்தி நிறுவனம் விளங்கி வருகிறது.

அந்தவகையில் நெல்லை மாவட்டம், கங்கை கொண்டான் சிப்காட்டில் 146 ஏக்கரில் ரூ.1,260 கோடி முதலீட்டில் சோலார் பேனல் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க உள்ளது. இதற்காக சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஒன்றிய அரசிடம் விக்ரம் சோலார் நிறுவனம் விண்ணப்பித்தாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த தொழிற்சாலை மூலம் 3 ஜிகா வாட் சோலார் மற்றும் பிவி சோலார் மாட்யூல் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த தொழிற்சாலை மூலம் 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தகவல் வெளியாகி […]