விக்ரம் லேண்டரில் இருந்து பிரிந்து வெற்றிகரமாக வெளியே வந்தது பிரக்யான் ரோவர்: இஸ்ரோ அதிகாரப்பூர்வ தகவல்

விக்ரம் லேண்டரில் இருந்து பிரிந்து வெற்றிகரமாக பிரக்யான் ரோவர் வெளியே வந்தது என இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவில் தனிமங்களையும், தாதுக்களையும் கண்டறியும் வகையில் ரோவர் ஆய்வு நடத்த உள்ளது.
நிலவின் தட்டையான மேற்பரப்பை தேர்ந்தெடுத்த விக்ரம் லேண்டர்: இஸ்ரோ முக்கிய அப்டேட்

நிலவில் தரையிறங்கிய பிறகு பிரக்யான் ரோவரை சுமந்து செல்லும் “விக்ரம்” லேண்டர் எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ பகிர்ந்துள்ளது. நிலவின் தட்டையான மேற்பரப்பில் வெற்றிகரமாக சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கியதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சற்றுமுன்னதாக, நிலவில் தரையிறங்கிய பிறகு பிரக்யான் ரோவரை சுமந்து செல்லும் விண்கலத்தின் “விக்ரம்” லேண்டர் எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ பகிர்ந்துள்ளது. சந்திரயான் விண்கலம் தரையிறங்கிய தளத்தின் ஒரு பகுதியை புகைப்படம் காட்டுகிறது. மேலும், இந்த புகைப்படத்தில் விக்ரம் லேண்டரின் கால், அதனுடன் நிழலும் தெரிகிறது. மேலும் […]