மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தவைலர் விஜயகாந்த் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பினார்
சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் டிஸ்சார்ஜ்
மியாட் மருத்துவமனையில் பாதுகாப்பு அதிகரிப்பு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பெற்று வரும் மியாட் மருத்துவமனையை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நவ.18ஆம் தேதி மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில், மருத்துவமனை முன்பு தேமுதிக தொண்டர்கள் அதிக அளவில் வரக்கூடும் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கையாக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
நடிகரும் தேமுதிக நிறுவனருமான திரு விஜயகாந்த் அவர்களின் உடல் நிலை குறித்து ஆழ்ந்த கவலை

நான் கோடிக்கணக்கான அவரது ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பவர்களை இணைகிறேன், அவருக்கு விரைவில் குணமடைய வாழ்த்துக்கள். இக்கட்டான காலத்தை கடந்து செல்லும் ஸ்ரீ விஜயகாந்த் குடும்பத்திற்கு என் அன்பும் ஆதரவும். -ராகுல் காந்தி-
நடிகர் விஜயகாந்த் உடல்நிலை பின்னடைவு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை பின்னடைவு மியாட் மருத்துவமனையில் சிக்கிஸ் பெற்று வரும் விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை என்று மருத்துவமனை தகவல்
விஜயகாந்த் நன்றாக இருக்கிறார்.. தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாநாடு தேமுதிக சார்பில் நடத்தப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

தேனி அல்லிநகரம் பகுதியில் தேமுதிக சார்பில் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு வறுமை ஒழிப்பு தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் மேடையில் பேசிய அவர், விஜயகாந்த் எப்படி இருக்கிறார் என்று தான் போகும் இடமெல்லாம் கேட்கிறார்கள், விஜயகாந்த் நன்றாக இருக்கிறார். நம்மோடு நூறு ஆண்டு காலம் இருந்து வழிநடத்துவார். எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். நல்லவர்கள் வாழ்ந்ததாக இருக்க வேண்டுமே தவிர, […]
தேமுதிக நிறுவன தலைவரும் அக்கட்சியின் பொதுச்செயலாளருமான விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன், இளைய மகன் திரைப்பட நடிகர் சண்முக பாண்டியன், இருவமும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய விஜயபிரபாகரன் கூறுகையில், “கேப்டன் விஜயகாந்தின் உடல்நலத்தில் சற்று பின்னடைவு தான், ஆனால் கேப்டன் விஜயகாந்த் 100 வருடம் நல்லா இருப்பார், அவர் பழையபடி பேசுவார், எழுந்து வருவார் அதற்கான முயற்சிகளை செய்து வருகிறோம்.
அரசியலில் இருந்து விலகுகிறார் விஜயகாந்த்..?

விரைவில் மக்களவை தேர்தல் வரவுள்ள நிலையில், தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பிரேமலதா தலைமையில் வரும் 24ம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பிரேமலதாவை செயல் தலைவராக்குவது. விஜயகாந்த் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு இளைஞர் அணி செயலாளர் பதவி வழங்குவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது. பிரேமலதா தலைவராகும் பட்சத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் முற்றிலும் அரசியலில் இருந்து விலகி விடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.