முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (28.12.2023) சென்னையில் உடல்நல குறைவால் காலமான தேசிய முற்போக்கு திராவிடக் கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் இல்லத்திற்கு நேரில் சென்று மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்

உடன் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி.பிரபாகரராஜா மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவர் பூச்சி எஸ்.முருகன் ஆகியோர் உள்ளனர்.
பசிப்பிணி போக்கிய மாமனிதர் விஜயகாந்த்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகழாரம்

பசிப்பிணி போக்கிய மாமனிதர் விஜயகாந்த் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகழாரம் செய்துள்ளார். உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் பேரன்பைப் பெற்ற அற்புதமான கலைஞர். தன்னலமற்ற தலைவர்; தமிழ்மக்கள் நலன் ஒன்றையே நோக்கமாகக் கொண்டவர்; கொடுத்துச் சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர் என்று தெரிவித்தார்.
நாளை மாலை 4.45 மணியளவில் தேமுதிக கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

அன்பிற்கினிய நண்பர் கேப்டன் விஜயகாந்த் மறைவெய்திய செய்தி பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. நல்ல உள்ளத்திற்கு சொந்தக்காரரான அவர் திரையுலகிலும் பொதுவாழ்விலும் தனது கடும் உழைப்பினால் வெற்றிகரமான முத்திரைகளைப் பதித்த சாதனையாளர். ▪️ நடிகராக, நடிகர் சங்கத் தலைவராக, அரசியல் கட்சித் தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக அவர் ஏற்றுக்கொண்ட பணி எதுவாக இருந்தாலும் அதில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தன்னைச் சார்ந்த அனைவருக்கும் உறுதுணையாக இருந்தவர். குடும்ப நண்பராக என்னிடம் பழகியவர். முத்தமிழறிஞர் […]
கேப்டன் விஜயகாந்த்…

‘நாராயணன் விஜயராஜ் அழகர்சுவாமி’ என்ற இயற்பெயர் கொண்டுள்ள இவர், தமிழ் சினிமாவில் விஜயகாந்த் என்ற பெயரில் அறியப்படுகிறார். இவர் தமிழ் திரையுலக பிரபல முன்னணி முக்கிய நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் தமிழக சட்டசபை அரசியல்வாதியும் ஆவார். விஜயகாந்த் 1979 ஆம் ஆண்டு ‘அகல் விளக்கு’ திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 2015 ஆம் ஆண்டு வரை 150-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து தமிழ் மக்களின் அன்பை கவர்ந்து பிரபலமானவர். விஜயகாந்த் இதுவரை […]
விஜயகாந்த் உடலை ராஜாஜி ஹாலில் வைத்து அஞ்சலி செலுத்த அரசு அனுமதி
தேசிய முற்போக்கு திராவிடக் கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி

விஜயகாந்த் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்.
விஜயகாந்த் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது: பிரதமர் மோடி இரங்கல்

தமிழ் திரையுலகின் ஜாம்பவான் விஜயகாந்த்-பிரதமர் நரேந்திர மோடி இரங்கல். விஜயகாந்த்தின் நடிப்பு பல லட்சம் மக்களின் இதயங்களைக் கவர்ந்தது. தமிழ்நாட்டின் அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் விஜயகாந்த். பொதுசேவையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார் விஜயகாந்த். என்னுடைய நெருங்கிய நண்பராக இருந்தார்-பிரதமர் மோடி
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டிருந்த நிலையில் விஜயகாந்த் காலமானார்
தேமுதிகவின் பொருளாளராக 2018ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பிரேமலதா விஜயகாந்த், தற்போது பொதுச் செயலாளராகியுள்ளார்

தேமுதிக பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டதும் விஜயகாந்த் காலில் விழுந்த பிரேமலதா!