த.வெ.கா மாநாட்டில் 270 பேர் மயக்கம்
மதுரையில் விஜய் கட்சியின் மாநாடு இன்று பிற்பகலில் தொடங்கியது .ஆனால் காலையிலிருந்து தொண்டர்கள் கொளுத்தும் வெயிலில் குவிந்து விட்டனர் இதன் காரணமாக பலர் மயக்கம் அடைந்தனர் 270 பேர் இவ்வாறு வெயிலில் மயங்கினார்கள் அவர்களை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்
தூய்மை பணியாளர்களுடன் விஜய் சந்திப்பு
சென்னை, பனையூரில் தூய்மை பணியாளர்களைசந்தித்தார் தவெக தலைவர் விஜய் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைபணியாளர்களின் குழு விஜய் உடன் சந்திப்பு
விஜய் பக்கம் செல்லும் ஓபிஎஸ்
திருச்சி வந்த பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் அனுமதி கேட்டார் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது இந்த நிலையில் அவரது அரசியல் ஆலோசகரான பண்ருட்டி ராமச்சந்திரன் என்டிஏ ஒரு ஆபத்தான கூட்டணி என்று கூறியுள்ளார் அவர் மேலும் கூறியதாவது:-2026 தேர்தலில் தி.மு.க. – த.வெ.க. இடையேதான் போட்டி; விஜய் – ஓ.பன்னீர் செல்வம் சேர்ந்தால் அரசியலை நடத்த முடியும், தென்மாவட்டங்களில் அதுதான் பலம்” என பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்
விஜய்கட்சி ஸ்டிக்கரில் ஆனந்த்படம் நீக்கம்.
தவெக பிரச்சார ஸ்டிக்கர்களில் புஸ்ஸி ஆனந்த் படத்தை நீக்கிவிட்டு, விஜய் படம் மட்டும் இடம் பெற வேண்டுமென தலைமை உத்தரவிட்டுள்ளதாக கட்சியினர் தெரிவித்தனர். கும்பகோணம் வட்டம் தாராசுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தினர் வீடுதோறும் ‘மக்கள் விரும்பும் உங்கள் வேட்பாளர் விஜய்’ என அச்சிட்ட ஸ்டிக்கர்களை 300-க் கும் மேற்பட்ட வீடுகளில் நேற்று முன்தினம் ஒட்டினர். இந்த ஸ்டிக்கரில் விஜய் படத்துடன், கட்சி பொது செயலாளர் ஆனந்த் படமும் இருந்தது. தற்போது அதை நீக்கி விட்டு புதிய ஸ்டிக்கரை […]
விஜய் கட்சி மாவட்ட செயலாளர் கூட்டம் தள்ளி வைப்பு
தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி உறுப்பினர்கள் என்ற இலக்குடன் உறுப்பினர் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ஏற்கெனவே, இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது புதிய செயலியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, ஜூலை 20-ம் தேதி (நேற்று) விஜய் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்றும், அதில் உறுப்பினர் சேர்க்கை செயலியை விஜய் அறிமுகம் செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சிகள் திடீரென தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 25 -ல் மதுரையில் விஜய் மாநாடு
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி அன்று மதுரையில் நடைபெற உள்ளது இது தொடர்பாக விய தனது எக்ஸ் பக்கத்தில், . தமிழக அரசியல் களத்தின் முதன்மை சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்கிறேன். வாகை சூடும் வரலாறு திரும்பட்டும். வெற்றி நிச்சயம். நன்றி.” என்று […]
விஜய் கட்சி பாஜக அணியில் சேர்ப்பா? அமித்ஷா பதில்
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பா.ஜ.க கூட்டணியில் சேர்வாரா என்று மத்திய மந்திரி அமைச்சர் அமித்ஷாவிடம் கேட்கப்பட்டது அதற்கு அவர் தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளன அப்போதுதான் இது பற்றி தெளிவாக தெரியும். கட்சியில் நடிகர்களை சேர்ப்பது குறித்து உள்ளூர் தலைவர்கள் முடிவு செய்வார்கள் என்று தெரிவித்தார்
விஜய் கட்சியில் ஒன்றரை கோடி உறுப்பினர்கள்
நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகத்தில் புதிதாக ஒன்றரை கோடி உறுப்பினர்கள் சேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதில் 70 சதவீதம் பேர் இளைஞர்கள் செயலி மூலம் உறுப்பினர் சேர்க்கை நடந்தது இதன் மூலம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு அவர்களை நிர்வாகிகள் சந்தித்து பேச உள்ளன ர்.விரைவில் வருகிற ஞாயிற்றுக்கிழமை நடிகர் விஜய் மீண்டும் பள்ளி மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
.இது தமிழ் பண்பாடா? வேல்முருகனுக்கு கண்டனம்
நடிகர் விஜய் குறித்து வேல்முருகன் பேசியதற்கு தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். மாணவ, மாணவிகள் விஜய்யை அண்ணா என அழைப்பது அன்பின் வெளிப்பாடு என கூறியுள்ளார். இது அரசியலுக்கு அப்பாற்பட்ட அழைப்பு, அந்த உறவை கொச்சைப்படுத்துவது, குழந்தைகள் மற்றும் பெற்றோரின் மனதை புண்படுத்தும் செயலாகும் என சாடியுள்ளார். மேலும் இது தமிழ் பண்பாடும் அல்ல, மனிதநேயமும் அல்ல என்றும் விமர்சித்துள்ளார்.
திமிர் பிடித்த திமுக ஆட்சி
விஜய் தாக்கு வியாசர்பாடியில் த.வெ.கவினர் தாக்கப்பட்டதாக புகார் எழுந்ததை தொடர்ந்து காவல் துறை, ஆளுங்கட்சியின் ஏவல் துறையாக மாறி, அப்பாவிகள் மீது மிருகப் பலத்தைக் காட்டி, மக்களிடம் வெறுப்புகளைக் குவித்து வருகிறது. பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றி வரும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான விளம்பர மாடல் அரசு, பெண்களின் உரிமைகளைப் பறித்து, அவர்களை வீதியில் போராட வைத்திருக்கிறது. இதேநிலை தொடர்ந்தால், தவெக சார்பில் மக்களைத் திரட்டி மிகப்பெரிய மக்கள் போராட்டம் நடத்தப்படும்,” என்று அக்கட்சியின் தலைவர் விஜய் […]