பனையூர் பண்ணையார் தான் பெரும் ஊழல்வாதி – விஜய்க்கு அதிமுக பதிலடி!

“பனையூர் பண்ணையார் அவர்களே, ஊழல் என்பது சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கும் செயல். சட்டத்திற்கு விரோதமாக தொடர்ந்து ப்ளாக்கில் டிக்கெட் விற்று அதன் மூலம் பல கோடிகள் கண்ட நீங்கள் தான் ஆகப்பெரும் ஊழல்வாதி” – அதிமுகவை ஊழல் கட்சி என்று விமர்சித்த விஜய்க்கு அதிமுக பதிலடி

விஜயிடம் சிபிஐ விசாரணை

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை. நடத்துகிறது இந்த விசாரணைக்கு வரும் படி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது . இதற்காக அவர் தனி விமானத்தில் டெல்லி சென்றார். இன்றும் நாளையும் அவரிடம் விசாரணை நடைபெற உள்ளது விசாரணை இறுதிக்கட்டத்தை அடைந்து விட்டதால் விரைவில் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

விஜய்க்கு எதிராக பேசக்கூடாது!

திமுகவுக்கான சிறுபான்மை வாக்குகளை சரிசமமாக பிரிப்பதில் விஜய் முக்கிய பங்கு வகிப்பார். விஜய் பாஜக கூட்டணிக்கு வர வேண்டிய தேவை இல்லை என்றாலும், கட்சி பொதுக்கூட்டங்களிலோ, சமூக வலைதளங்களிலோ அவருக்கு எதிரான கருத்துக்கள் தெரிவிப்பதை பாஜகவினர் தவிர்க்க வேண்டும்” – தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்!

மலேசியாவில் விஜய்க்கு கட்டுப்பாடு

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் நடித்த ஜனநாயகன்படத்தில் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறுகிறது வருகிற 27ஆம் தேதி இந்த நிகழ்ச்சி நடக்கிறது இந்த நிகழ்ச்சியில் அரசியல் எதுவும் பேசக்கூடாது என்று மலேசியா அரசு கடுமையான கட்டுப்பாடு விதித்துள்ளது

ஸ்பீக்கர் டவரில் ஏறி விஜயிடம் பறக்கும் முத்தம் கேட்ட தொண்டர்

ஈரோட்டில் நடந்த விஜய் பொதுக்கூட்டத்தில் ஒரு தொண்டர் ஸ்பீக்கர் டவரில் ஏறி உட்கார்ந்து கொண்டு பறக்க முத்தம் கேட்டார் நீ பார்த்த விஜய் நீங்கள் கீழே இறங்கினால் தான் முத்தம் தருவேன் என்று கூறினார். பலமுறை விஜய் இவ்வாறு கூறிய பிறகு அந்த தொண்டர் கீழே இறங்கினார்

சார் பேசினால் சினிமா வசனம் இல்லையாம், சிலப்பதிகாரத்திலிருந்து எடுத்ததாம்… தவெக தலைவர் விஜய்.

“அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் அவர்கள் பேசும்போது, “என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கிறீங்களே” எனக் கூறினார். நான் பேசினால் மட்டும் சினிமா வசனமாம், சார் பேசினால் சினிமா வசனம் இல்லையாம்… சிலப்பதிகாரத்திலிருந்து எடுத்ததாம்!” – தவெக தலைவர் விஜய்

ஈரோடு கூட்டம் விஜய் வெளியீட்ட வீடியோ

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் இன்று ஈரோட்டில் நடந்த பிரம்மாண்ட கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் கூட்டம் முடிந்த போது அவர் செல்பி வீடியோ எடுத்தார் அதை அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் இந்த வீடியோ வைரலாகி வருகிறது

விஜய் கூட்டத்துக்கு புதிய கட்டுப்பாடு

ஈரோட்டில் தமிழக வெட்டி கழக தலைவர் விஜய் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது இதற்காக காவல்துறை விதித்த நிபந்தனைகளில் ஒன்று“போதுமான CCTV-க்கள் அமைத்து நிகழ்ச்சி நடைபெறும் இடம் முழுவதையும் கண்காணிக்க கண்காணிப்பு அறை ஏற்பாடு செய்ய வேண்டும். Drone Camera மூலம் நிகழ்ச்சியை முழுமையாக வீடியோ பதிவு செய்து காவல்துறை வசம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்’’என்று கூறப்பட்டுள்ளது

புதுவையில் விஜய் பொதுக் கூட்டத்திற்கு அனுமதி.

புதுவையில் டிசம்பர் 9இல் நடைபெறும் தவெக பொதுக் கூட்டத்துக்கு அனுமதி அளித்தார் முதல்வர் ரங்கசாமி தலைமைச் செயலகத்தில் முதல்வர் என். ரங்கசாமியை நேரில் சந்தித்த தவெக பொதுச்செயலர் ஆனந்த் பொதுக் கூட்ட அனுமதி கடிதத்தைப் பெற்றுச் சென்றார்.

சென்னையில் விஜய்யுடன் காங்கிரஸ் பிரமுகர் ரகசிய சந்திப்பு

காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி தவெகவில் இணைவதாக கூறப்படுகிறது.அவர் விஜயை ரகசியமாக சந்தித்து உள்ளார் மயிலாப்பூர் தொகுதி கேட்கிறார் இதனால் காங்கிரசார் கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர்