சேலையூரில் பட்டப்பகலில் இருசக்கர வாகனம் திருட்டு வீடியோ வெளியீடு

சேலையூரில் பட்டம் பகலில் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற நபரின் சிசிடிவிவெளியாகி பரபரப்பு கிழக்கு தாம்பரம் அடுத்த சேலையூர் ஜெகஜீவன் ராம் காலனி பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவருடைய வீட்டில் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டம் பகலில் நடந்து சென்ற நபர் திரும்பி வரும்போது இருசக்கர வானகத்தை ஓட்டி சென்றார். மேலும் இதன் தொடர்பாக சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பெயரில் சிசிடிவி […]
பஸ் டிரைவரை தாக்கிய சட்டக் கல்லூரி மாணவி வைரல் வீடியோ

குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் மாநகர பேரூந்து ஓட்டுனர், நடத்துனரை தாக்கிய சட்டகல்லூரி மாணவி, அவர் கணவர் உள்ளிட்ட 4 பேரை குரோம்பேட்டை போலீசார் கைதுசெய்தனர். சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, அதிமுக கொடிகட்டிய காரும் பறிமுதல் தொடந்து விசாரணை திருவான்மியூரில் இருந்து கூடுவாஞ்சேரி செல்லும் தடம் எண் 91V மாநகர பேரூந்தை ஓட்டுனர் அசோக்குமார் ஓட்டி சென்றார். நடத்துனர் இருசப்பன் உள்ளிட்ட பயணிகள் பேரூந்தில் இருந்த நிலையில் குரோம்பேட்டையில் பேரூந்து நிறுத்தத்தில் நிற்க ஓரமாக பேரூந்தை அசோக்குமார் ஓட்டியுள்ளார். […]
மழையில் நனைந்த நாய்க்குட்டிகளை காரில் பாதுகாத்த ஆட்டோ டிரைவர் வீடியோ வைரல்

தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் கொட்டும் மழையில் முள் புதரில் குட்டிகளுடன் தவித்த தெரு நாய்களை தனது ஆட்டோ, காரில் இடம் அளித்த ஆட்டோ ஓட்டுநர் சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் நூத்தஞ்சேரி ஆதித்யாநகர் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் ஆட்டோ ஓட்டுநராக பணி செய்கிறார். இன்று மாலை வசித்துவரும் வீட்டின் அருகே முற்புதரில் நாய்கள் குரல்களால் முனகல் சத்தம் கேட்டது. பார்த்த தேவராஜின் குடும்பதினர் இரண்டு பெண் நாய்கள் முள் புதரில் குட்டிகளை சிலமணி நேரத்திற்கு முன் ஈன்று […]
தாம்பரத்தில் நடுரோட்டில் நின்ற அரசு பஸ், கண்டக்டர் உட்பட 3பேர் தள்ளிய வீடியோ வைரல்

தள்ளு…தள்ளு….தள்ளு….. ஸ்டார்ட் ஆகாமல் மக்கார் செய்த பேருந்து 50 பயணியை வைத்து தனி ஆளாக பேருந்தை தள்ளிய நடத்துனர் உதவிக்கு வந்த இருவர் ஒரே தள்ளில் இயக்கபட்ட பேருந்து சமூக வளைதளங்களில் வைரலாகும் காட்சி! மேற்கு தாம்பரம் பேருந்து நிலையத்தில் மேற்கு தாம்பரம், அகரம்தென் செல்லகூடிய 31A வழிதடம் எண் கொண்ட பேருந்து புறபட தயாராக இருந்தது. அப்போது அந்த பெருந்தை இயக்க முற்பட்ட ஓட்டுநர் வாகனம் ஸ்டார்ட் ஆகாமல் மக்கார் செய்தது. இதனை அறிந்த நடத்துனர் […]
கடற்கரை ஒன்றில் குவியல் குவியலாக பாம்புகள் பாறை கற்கள் நடுவே ஊர்ந்து செல்வது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது

இந்த வீடியோ கன்னியாகுமரியில் எடுக்கப்பட்டது என்று சிலர் சமூக வலைதளங்களில் பரப்பினர். மேலும், கன்னியாகுமரி கடற்கரைக்கு செல்லும்போது பாறை மீது அமர்கிறவர்கள் கவனிக்கவும் எனவும் தெரிவிக்கப்பட்டு அந்த படங்களை பலரும் பகிர்ந்தனர். இது சுற்றுலா பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. ஆனால் இது கன்னியாகுமரியில் எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்று சிலர் தெரிவித்த போதிலும், சமூக வலைதளவாசிகள் பலரும் கன்னியாகுமரி கடற்கரையில் பாம்பு குவியல் என பகிர்ந்து வருகின்றனர்.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழுவும் தகவலை பதிவிட்டுள்ளது. […]
ரேவண்ணா மீது தணிக்கை குழு வழக்குப்பதிவு

ஆபாச வீடியோக்கள் தொடர்பான புகாரில் பிரஜ்வல் ரேவண்ணா மீது சிறப்பு தணிக்கை குழு வழக்குப்பதிவு மாஜிஸ்திரேட் முன்பு பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பாலியல் வன்புணர்வுக்கான சட்டப்பிரிவும் எஃப்.ஐ.ஆரில் கூடுதலாக சேர்ப்பு
சிறார் ஆபாச பதிவுகளை நீக்க உத்தரவு

எக்ஸ், யூடியூப், டெலிகிராம் ஆகிய மூன்று நிறுவனங்களும் குழந்தைகளின் ஆபாசப் படங்களை தங்கள் தளங்களில் இருந்து நீக்க வேண்டும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தவறினால் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சட்டப் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசு அனுப்பியுள்ள நோட்டீசில், குறிப்பிட்ட மூன்ற சமூக வலைதளங்களும், தங்களது இந்தியப் பிரிவில் பதிவேற்றம் செய்யப்படும் குழந்தைகளின் ஆபாசப் படங்களை நிரந்தரமாக […]
ஆபாச வீடியோ எடுத்து மனைவியை மிரட்டிய கணவன்

கர்நாடக மாநிலம் பெங்களூரு பசவகுடி பிஎஸ் பகுதியைச் சேர்ந்த புதுமணத் தம்பதி நவம்பர் மாதம் தேனிலவுக்காக தாய்லாந்து சென்றனர். அப்போது மனைவியின் நிர்வாண வீடியோக்களை கணவன் செல்போனில் பதிவு செய்துள்ளார். அதன்பிறகு பணத்தை கேட்டு அவரை தொந்தரவு செய்துள்ளார். அதன்பேரில், மனைவி போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவனே மனைவியை ஆபாசமாக வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.