வெற்றி துரைசாமி உடல் இன்று மாலை நல்லடக்கம்
8 நாள்கள் தேடுதல் பணி; மீட்கப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல்… விபத்தும் மீட்பும் – நடந்தது என்ன?

எட்டு நாள்கள் தீவிர தேடுதல் பணிகளுக்குப் பின்னர் சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் ஒரே மகனான வெற்றி துரைசாமியின் உடல் சட்லஜ் நதியின் பாறைக்கடியில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. சென்னை மாநகராட்சி அ.தி.மு.க முன்னாள் மேயரும், மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தின் நிறுவனருமான சைதை துரைசாமியின் ஒரே மகன் வெற்றி துரைசாமி. தந்தையின் ஐஏஎஸ் பயிற்சி மையத்தை மேலாண்மை செய்துகொண்டே, சினிமா மீது கொண்ட அதீத ஆர்வத்தால் `என்றாவது ஒரு நாள்’ என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குநராகவும் […]
“இமாச்சல பிரதேசத்தில் நடந்த கார் விபத்தில் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்;

எந்தவொரு தந்தையும் எதிர்கொள்ளக் கூடாத, எதிர்கொள்ள இயலாத துயரம் இது. மகனை இழந்து தவிக்கும் சகோதரர் சைதை துரைசாமிக்கு இத்துயர்மிகு நேரத்தில் எனது ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வெற்றி துரைசாமியை தேடும் பணி 5வது நாளாக தீவிரம்

இமாச்சலில், சட்லஜ் நதிக்கரையில் மாயமான முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியை தேடும் பணி 5வது நாளாக தொடர்கிறது.