மதுரை புதிய மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர்:
மதுரை மேலமடை சந்திப்புப் பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் உள்ள திருநகர் மேலமடை சந்திப்பில் ரூ.150.28 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை நாளை (07.12.2025) திறந்து வைக்கிறார். இந்த மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம் என்று பெயர் சூட்டப்படும் என அறிவித்துள்ளார்.