கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்தியதாக 14 அதிகாரிகள் மீது வழக்கு

வேலூரில் கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய விவகாரத்தில் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, கூடுதல் எஸ்.பி. உள்ளிட்ட 14 அதிகாரிகள், காவலர்கள் மீது வழக்குப்பதிவு. பிறருக்கு காயம் ஏற்படுத்துதல், சட்டவிரோத சிறைவைப்பு உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது சிபிசிஐடி.

சென்னை கடற்கரை முதல் வேலூர் கண்டோன்மென்ட் வரை தினசரி இயக்கப்படும் பயணிகள் ரயிலை திருவண்ணாமலை வரை நீட்டிக்க வேண்டும் என்று பயணிகள், பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்

அதன் அடிப்படையில், இந்த பயணிகள் ரயிலை திருவண்ணாமலை வரை நீட்டிப்பு செய்ய ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து திருவண்ணாமலை வரை 19 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 2ம் தேதி முதல் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு, திருவண்ணாமலை ரயில் நிலையத்துக்கு இரவு 12.05 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கமாக திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு, காலை 9.50 […]

எம்.பி கதிர் ஆனந்த் வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்!

அமைச்சர் துரைமுருகனின் மகனும், வேலூர் எம்.பி-யுமான கதிர் ஆனந்த், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பணம் பறிமுதல் செய்த வழக்கு தொடர்பாக வேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்காக ஆஜரானார்.

வேலூரில் நடந்த திமுக முப்பெரும் விழாவில் விருதுகள் வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

பெரியார் விருது- கி.சத்தியசீலன். அண்ணா விருது – க.சுந்தரம். கலைஞர் விருது-ஐ.பெரியசாமி. பாவேந்தர் விருது- மலிகா கதிரவன். பேராசிரியர் விருது – ந.இராமசாமி ஆகியோருக்கு முதல்வர் விருதுகளை வழங்கினார். திமுக முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை: தொண்டர்களாலேயே கட்சி தலைவராகவும், முதல்வராகவும் ஆக்கப்பட்டேன் ஒரு அரசியல் இயக்கம் 75 ஆண்டுகள் நிலைத்திருப்பது ஒன்றும் சாதாரணமானதல்ல தோன்றிய காலம் முதல் அதே இளமை, உணர்வோடு இருப்பது திமுக 2 கோடி திராவிட கொள்கைவாதிகளின் கோட்டை திமுக முப்பெரும் […]

தமிழ் நாட்டில் முதன்முதலில் வேலூரில் தயாரானது கோலி சோடாவுக்கு வயது 100

வேலூர்: தமிழ்நாட்டில் 1980-களில் குளிர்பானம் என்றதும் நினைவுக்கு வருவது கோலி சோடாதான். வீட்டுக்கு விருந்தினர் வந்ததும் பெட்டிக் கடை அல்லது பலசரக்கு கடைக்கு சென்று கோலி சோடா வாங்கித் தருவார்கள். அதன் பிறகு வெளிநாட்டு குளிர்பானங்கள் பிரபலமானது. குளிர்பானங்கள் எத்தனை வந்தாலும் கோலி சோடா மவுசு குறையவில்லை. தமிழ்நாட்டில் முதன் முதலில் வேலூரில் தான் கோலி சோடா தயாரானது. வேலூரில் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க அந்த காலத்திலேயே பலவிதமான குளிர்பானங்களை பருகத் தொடங்கினர். வேலூரை சேர்ந்த […]