வேளச்சேரியில் பஸ் மோதி வாலிபர் உயிரிழப்பு

வேளச்சேரியில் இருசக்கர வானம் மீது தனியார் நிறுவன பேரூந்து மோதியதில் இளைஞர் பலி சென்னை மடிப்பாக்கம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜோதிவாசன்(19) வேளச்சேரி மேம்பாலம் சர்வீஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து மோதிய நிலையில் இருசக்கர வாகனம் பேரூந்து கீழே சிக்கியது. இதில் ஜோதிவாசன் சம்பவ இடத்திலேயே உயிழந்தார். போக்குவரத்து புலனாய்வு போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை செய்து வருகிறார்கள்.
திருட்டை தட்டி கேட்ட வியாபாரிக்கு பீர் பாட்டில் குத்து

வேளச்சேரியில் திருட்டை தடுத்ததால் வியாபாரியை பீர் பாட்டிலால் சரமாரியாக குத்திய இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னை, மேடவாக்கம், காமராஜர் தெருவை சேர்ந்தவர் முனிராஜ், 54. இவர், வேளச்சேரி, விஜயநகர், சரவண ஸ்டோர் முன்புறம் பெல்ட், மணி பர்ஸ் விற்கும் கடை நடத்தி வருகிறார். கடந்த வாரம் இவரின் கடையில் இருந்து பொருட்கள் திருடு போனது. அதிலிருந்து இரவு நேரத்தில் கடையில்லேயே தங்க ஆரம்பித்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் கடையின் முகப்பில் படுத்திருந்தபோது, இரண்டு நபர்கள் […]
வேளச்சேரியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவப் பரிசோதனை மற்றும் ஸ்கேன் மையத்தின் முப்பதாம் ஆண்டுவிழா சென்னையில் நடைபெற்றது

இதில் அந்த மையத்தின் நிறுவனர் கே.பாபு, தலைமை செயல் இயக்குனர், மீரா பாபு, மேலாண் நிர்வாகி ஹேமந்த் குமார், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி சோமு, முட நீக்கியல் சிறப்பு மருந்துவர் சரத் மோகன்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெங்கடேஷ்வரா மருத்துவ பரிசோதனை மையத்தின் சேவைகளை பாராட்டி பேசினார்.
சென்னை வேளச்சேரியில் கேஸ் பங்க் அருகே கட்டம் சரிந்து விழுந்த விபத்தில் மேலும் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
வேளச்சேரியில் டிச.4 ஆம் தேதி கேஸ் பங்க் அருகே ஐந்து பர்லாங்க் சாலை சந்திப்பில் கட்டுமான பணிகளுக்காக தோண்டப்பட்ட குழியில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கட்டடத்திற்குள் 10-க்கும் மேற்பட்டோர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியான நிலையில், 3 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து 8 பேர் சிக்கியிருப்பத்தாக கூறப்பட்டது. கனமழை அதிகயளவில் பெய்து வந்ததால் மீட்புப் பணியில் ஈடுபட முடியாமல் மீட்புக் குழுவினர் திணறி வந்த நிலையில், 6 பேரை உயிருடன் மீட்கப்பட்டனர். […]
வேளச்சேரியில் 2 பேரை பலிவாங்கிய கோர விபத்து எதிரொலி: கட்டுமான நிறுவனத்தின் மேற்பார்வையாளர்கள் 2 பேர் கைது ..!!
“சுனாமி வந்துச்சி. ஊருக்குள்ளே தண்ணி வந்துச்சி. கடல்லேயே ஏன் தடுக்கலைனு கேட்கமுடியுமா? அதே மாதிரி மழை வந்திச்சி, ஊருக்குள்ளே தண்ணி வந்துச்சி. என்ன செய்ய முடியும்? எதுவும் செய்ய முடியாது” – வேளச்சேரி எம் எல் ஏ ஹசன் மௌலானா

எப்பேர்ப்பட்ட புத்திசாலியை சட்ட மன்ற உறுப்பினராக பெற்றிருக்கிறார்கள் வேளச்சேரி மக்கள்! ‘லாட்டரியில்’ பரிசு விழுவதை போன்ற அதிர்ஷ்டசாலிகள் தான் வேளச்சேரி வாக்காளர்கள். நாராயணன் திருப்பதி