மேலும் 10 புதிய வந்தே பாரத் ரயில்கள்.!

நாட்டில் விரைவில் 10 புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதிவேக ரயில்களான வந்தே பாரத் ரயில்களை நாடு முழுவதும் இயக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் வருகிற செப். 15ம் தேதி 10 புதிய வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். ஜார்கண்ட் மாநிலத்தில் புதிய ரயில்களின் துவக்க விழா நடைபெற இருக்கிறது. வாரணாசி உட்பட பல்வேறு பகுதிகளுக்கு வந்தே பாரத் ரயில்வே இயக்கப்பட உள்ளன.
VandeBharat ரயிலை இயக்க அடித்துக் கொண்ட ஊழியர்கள்!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவுக்கு புதிய வந்தே பாரத் ரயில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் புதிய ரயில் ராஜஸ்தானின் காங்காபூர் நகருக்கு கடந்த 2-ம் தேதி வந்தபோது, அந்த ரயிலை ஓட்டுவதற்கு ரயில் டிரைவர்கள் போட்டியிட்டனர். இதனால் அவர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 3 டிரைவர்கள் இன்ஜின் அறையின் ஜன்னல் வழியாக நுழைந்து உள்ளே செல்ல முயன்றனர். வந்தே பாரத் ரயிலில் ஏற்கெனவே வந்திருந்த ரயில் ஓட்டுநர்களை, இவர்கள் அடித்து வெளியேற்றினர்.
வந்தே பாரத் ரயில்களின் வேகம் விரைவில் குறைப்பு

ரயில்கள் சந்திக்கும் விபத்துகள் உயிரிழப்புகளை ஏற்படுத்துகின்றன. இதற்கு, ரயிலின் வேகமும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது. குறிப்பிட்ட சில வழித்தடங்களில் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்ட, வந்தே பாரத், கதிமான் ரயில்களின் வேகத்தை மணிக்கு 130 கி.மீ.ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லையில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில், தாம்பரத்தில் நிறுத்தம்…

நாடாளுமன்ற குழு தலைவர் / திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் / கழக பொருளாளர் அண்ணன் திரு.T.R.பாலு B.sc. M.P., அவர்கள், தாம்பரம் மாநகர செயலாளர் / தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு.S.R.ராஜா.M.L.A., ஆகியோர் வைத்த கோரிக்கை மற்றும் தொடர் முயர்சியின் காரணமாக நெல்லையில் இருந்து சென்னைக்கு சென்ற வந்தே பாரத் ரயில், தாம்பரத்தில் நின்ற போது, விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் அண்ணன் திரு.தொல்.திருமாவளவன்.M.P., அவர்கள், தாம்பரம் மாநகர செயலாளர் / தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் […]
ஆகஸ்ட் 6 முதல் நெல்லைக்கு வந்தே பாரத் ரயில்

நாடு முழுவதும் அதிக வேகத்தில் செல்லும் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடியே இந்த ரயிலை தொடங்கி வைத்து வருகிறார். இது பகல் நேர ரயில் ஆகும்:தற்போது சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் விடப்படுகிறது. வருகிற ஆகஸ்ட் மாதம் 6-ந் தேதியே இந்த ரயில் விடப்படும் என்றும் இதனை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என்றும் தெரிகிறது. இதனை தெற்கு ரயில்வே அதிகாரிகள் இன்று உறுதிப்படுத்தினர். இதற்கிடையே வந்தே பாரத் […]