பொங்கல் விழா வண்டலூர் பூங்காவுக்கு 55 ஆயிரம் பேர் வருகை

காணும் பொங்கல் வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒரே நாளில் 25 ஆயிரம் பார்வையாளர்கள் வருகை, பொங்கல் பண்டிகை மூன்று நாட்களில் 55 ஆயிரம் பார்வையாளர்கள் வருகை புரிந்து பொங்கல் கொண்டாட்டம்
வண்டலூர் பூங்காவில் ஆறாவது நாளாக ஊழியர்கள் போராட்டம்

6வது நாளாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஊழியர் உள்ளிருப்பு போராட்டம், ஊழியர்களில் சங்க பெயர் பலகை, கொடிகளை அகற்றியதால் நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் தொடந்துள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் அமைக்க ஊழியர்கள் சங்க பலகை கொடியை வளாகத்தில் இருந்து அகற்றியதை கண்டித்து பூங்கா வாளாகத்தில் 6 வது நாளாக ஊழியர்கள உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முதல் மாடியில் உள்ள இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்ட நிலையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வண்டலூர் வந்த புதிய குரங்குகள், ஆந்தைகள், கழுகுகள்

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மற்றும் உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் உயிரியல் பூங்கா இடையே விலங்கு பரிமாற்றம் செய்யபட்டுள்ளது. இந்திய மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, ஆகஸ்ட் 2023 இல் வண்டலூர் அடுத்த அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கும் கான்பூர் உயிரியல் பூங்காவிற்கும் இடையே பூங்கா விலங்குகளை பரிமாறிக்கொள்ள முன்மொழியப்பட்டது. அதன்படி, பத்து அனுமன் குரங்குகள், ஐந்து மர ஆந்தைகள், ஒரு ஜோடி ஹிமாலயன் கிரிஃபோன் கழுகு மற்றும் ஒரு ஜோடி எகிப்திய கழுகுகள் […]