மரத்தில் வேன் மோதி 7 பேர் பலி: திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று திரும்பியபோது சோகம்

உளுந்தூர்பேட்டை: திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று திரும்பிய சுற்றுலா வேன் மரத்தில் மோதி 7பேர் பரிதாபமாக இறந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகா மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 22 பேர் ஒரு சுற்றுலா வேனில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்றனர். வேனை வசந்தகுமார் (23) என்பவர் ஓட்டினார். கோயிலுக்கு சென்றுவிட்டு சொந்த ஊருக்கு நேற்று முன்தினம் இரவு திரும்பி கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, மேட்டத்தூர் அருகே சென்றபோது திடீரென நிலை தடுமாறி […]

ரஜினி பண்ணை வீடு அருகே இரண்டு வேன்கள் எதிரே மோதல்

கேளம்பாக்கம் வண்டலூர் சாலையில் ரஜினி பண்ணை வீடு அருகே இரண்டு லோடு வேன்கள் எதிர் எதிரே மோதி விபத்து, ஓட்டுனர் லேசான காயம் இதனால் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு கேளம்பாக்கம் வண்டலூர் சாலை ரஜினி பண்ணை வீடு அருகே எதிர் எதிரே ஒரே சாலையில் ஓடிய லோடு வேன்கள் மோதிக்கொண்டதில் ஒருவேன் சாலை நடுவே தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து இதனால் அவ்வழியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு இரண்டு கிலோமீட்டர் தூரம் வாகனம் அணிவகுத்து நின்றன. […]

தாம்பரம் அருகே வேன் கவிழ்ந்து 2000 முட்டை சேதம்

தாம்பரம் அருகே முட்டை ஏற்றிசென்ற வேன் அச்சு முறிந்து கவிந்து விபத்து, 2000 ஆயிரம் முட்டைகள் உடைந்து சாலையில் ஆறாக ஓடியது. தாம்பரம் அடுத்த கேம்ரோடு பகுதியில் இயங்கும் ஏ.கே.ஜி முட்டை மொத்த விற்பனை நிலைத்தில் இருந்து ராஜகீழ்பாக்கம், காமராஜபுரம், மாடம்பாக்கம் உள்ளிட்ட கடைகளுக்கு வினியோகம் செய்ய மூடப்பட்ட மினி வேனில் ஏற்றப்பட்ட நிலையில் வேன் ஓட்டுனர் காசிராஜன்(35) வேனை கிழக்கு தாம்பரம் வேளச்சேரி மெயின்ரோட்டில் ஓட்டிச்சென்றார். அப்போது வேனின் முன் அச்சு முறிந்ததால் நிலைத்தடுமாறிய வேன் […]

குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் திருமண கோஷ்டி வேன் கவிழ்ந்து விபத்து

குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் திருமண நிகழ்ச்சிக்காக சென்றவர்களின் வேன் டயர் வெடித்து கவிழ்ந்த விபத்தில் ஓட்டுனர் உட்பட வேனில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். சேலத்தில் இருந்து சென்னை எழுப்பூரில் நடைபெறும் திருமணத்திற்க்காக 12 பேர் மஹேந்திரா டூரிஸ்டர் வேன் ஒன்றில் ஜி.எஸ்.டி சாலை வழியாக வந்து கொண்டிருந்தனர் வேனை சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஜெய் சாந்த் (24) ஓட்டி வந்துள்ளார். அப்போது குரோம்பேட்டை ,எம்.ஐ.டி மேம்பாலம் அருகே வேனின் டயர் திடிரென வெடித்ததால் சாலையில் இருந்த தடுப்பு […]

தாம்பரத்தில் இரண்டு பஸ்கள் வேன் அடுத்தடுத்து மோதி விபத்து

தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் இரண்டு மாநகர பேரூந்துகள், ஒரு லோடு வேன் அடுத்து அடுத்து மோதி விபத்து, இதனால் போக்குவரத்து நெரிசல் தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் முன்னால் சென்ற லோடு வேன், அதனை தொடர்ந்து கிளம்பாக்கம் பேரூந்து நிலையத்திற்கு இரண்டு மாநர பேரூந்துகள் சென்றுகொண்டு இருந்த நிலையில் ஒன்றோடு ஒன்று அடுத்து அடுத்து மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் சேதமடைந்த நிலையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்ய சாலையிலேயே வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் விபத்து பகுதிக்கு […]

தாம்பரம் அருகே நடுரோட்டில் தீ பிடித்து எரிந்த வேன்

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு ஆட்களை ராஜலட்சுமி டிராவல்ஸ் என்ற தனியார் நிறுவனம் அழைத்துச் செல்வது வழக்கம் இந்நிலையில் வாகனம் மூன்று நாட்களுக்கு முன்பு பழுதான நிலையில் கிஷ்கிந்தா சாலையில் உள்ள சர்வீஸ் சென்டரில் வாகனத்தை சரி செய்வதற்காக கொடுத்திருந்த நிலையில் இன்று வாகனம் சரி செய்யப்பட்டு சர்வீஸ் சென்டரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் எடுத்துச் செல்வதற்காக டிரைவர் பார்த்திபன் வாகனத்தை கிஸ்கிந்தா சாலையில் ஓட்டிச் சென்றார். அப்போது திடீரென வாகனத்தின் முன்பக்கத்தில் இருந்து புகை வருவதை […]