வைகோவுக்காக மன்னிப்பு கேட்ட துரை வைகோ.

சாத்தூரில் நடந்த மதிமுக நிர்வாக குழு கூட்டத்தில் மண்டபம் தெரிவித்து நிர்வாகிகள் வெளியேறும் போது படம் எடுத்த ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டனர். இது சார்பாக வைகோ மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது தற்போது வைகோவின் நடவடிக்கைக்காக அவரது மகன் துரை வைகோ மன்னிப்பு கேட்டுள்ளார்

அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது – வைகோ.

திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கனத்த இதயத்துடன் பேசியுள்ளார். சென்னை எழும்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது:- ஈழத்திற்கு சென்று பிரபாகரனை சந்திக்க வேண்டும் என சீட்டு மூலம் இரண்டு முறை கூறிய பின்னர்தான் பிரபாகரன் நான் ஈழத்திற்கு வர சம்மதம் தெரிவித்தார். அதன் பின்னர் இங்கிருந்து புறப்படும் முன் என் மனைவிக்கு பட்டு புடவை என்னுடைய குழந்தைகளுக்கு புதிய ஆடைகள் எடுத்து கொடுத்தேன். மீண்டும் நான் […]

வைகோவுக்கு ஆப்ரேஷன் சக்சஸ் – துரை வைகோ

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறுவை சிகிச்சைக்கு பிறகு நலமுடன் உள்ளதாக அவரது மகன் துரை வைகோ அறிக்கை. தோள்பட்டையில் 3 இடங்களில் ஏற்பட்டிருந்த எலும்பு முறிவை சரிசெய்ய டைட்டானியம் பிளேட் வைக்கப்பட்டுள்ளது. 40 நாட்கள் ஓய்வுக்கு பிறகு வைகோ இயல்பு நிலைக்கு திரும்புவார் – துரை வைகோ

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விரைவில் நலம் பெற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்

வைகோ விரைவில் முழுமையாக உடல் நலம் பெற்ற அரசியல் பணியை தொடர வேண்டும் என விரும்புகிறேன் என ராமதாஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

‘ஒரு தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிடுகிறோம்’

எங்களுக்கு ஒதுக்கிய தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிடவுள்ளோம். மாநிலங்களவை சீட் பற்றி பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்படும். மாநிலங்களவை தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்கள் இருப்பதால் அது குறித்து அந்த நேரத்தில் பேசுவோம் -மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ அவர்களை இன்று (01.3.2024) அவரது 71-வது பிறந்தநாளையொட்டி, சென்னை, அண்ணா அறிவாலயத்தில்‌, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ பொதுச்‌ செயலாளரும்‌, நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ, தலைமைக்‌ கழக செயலாளர்‌ துரை வையாபுரி. அவைத்‌ தலைவர்‌ அர்ஜுன்‌ ராஜ்‌, துணை பொதுச்‌ செயலாளர்‌ மல்லை சத்யா ஆகியோர்‌ சந்தித்து பிறந்தநாள்‌ வாழ்த்து தெரிவித்தனர்.