அரசை விமர்சித்து எழுதுவதனாலேயே மட்டுமே, பத்திரிகையாளர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யக்கூடாது

உ.பி. மாநில நிர்வாகத்தில் நிலவும் சாதிய பாகுபாடு குறித்து கட்டுரை எழுதிய பத்திரிகையாளர் அபிஷேக் உபாத்யாய்க்கு எதிராக பதிந்த FIR-ல் இடைக்கால பாதுகாப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் கருத்து
உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூரில் டிராக்டர் மீது லாரி மோதியதில் 10 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூரில் டிராக்டர் மீது லாரி மோதியதில் 10 பேர் உயிரிழந்தனர். 13 பேருடன் வாரணாசியை நோக்கி சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காயமடைந்த 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கூட்ட நெரிசலில் சிக்கி உ.பி.யில் 116 பேர் பரிதாப பலி: சாமியாரின் சொற்பொழிவை கேட்க வந்தபோது விபரீதம்

ஹத்ராஸ்: உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்தரஸ் மாவட்டத்தில் சாமியாரின் சொற்பொழிவு கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 116 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் புல்ராய் என்ற கிராமம் உள்ளது. இங்கு நாராயண் சாகர் விஷ்வ ஹரி என்கிற போலே பாபா எனும் சாமியாரின் மடம் அமைந்துள்ளது. அனைத்து மக்களாலும் போலே பாபா என்று அழைக்கப்படும் அவரது மடத்தில் அனைத்து மதத்தினரும் பங்கேற்கும் மனிதநேய மங்கள சந்திப்பு என்ற பெயரில் நேற்று சொற்பொழிவு நடைபெற்றது. […]
இஸ்லாமிய மாணவர்களை தாக்கிய விவகாரம்!

பள்ளியை நிரந்தரமாக மூட உத்தரபிரதேச முதல்வர் யோகி உத்தரவு.