மரத்தில் வேன் மோதி 7 பேர் பலி: திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று திரும்பியபோது சோகம்

உளுந்தூர்பேட்டை: திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று திரும்பிய சுற்றுலா வேன் மரத்தில் மோதி 7பேர் பரிதாபமாக இறந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகா மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 22 பேர் ஒரு சுற்றுலா வேனில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்றனர். வேனை வசந்தகுமார் (23) என்பவர் ஓட்டினார். கோயிலுக்கு சென்றுவிட்டு சொந்த ஊருக்கு நேற்று முன்தினம் இரவு திரும்பி கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, மேட்டத்தூர் அருகே சென்றபோது திடீரென நிலை தடுமாறி […]