யுஜிசி நெட் தேர்வை ரத்து செய்ய முடியாது – உச்ச நீதிமன்றம்

நடப்பாண்டு யுஜிசி நெட் தேர்வை ஒத்தி வைக்கக்கோரிய மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு மறுப்பு. வரும் 21 ஆம் தேதி நடக்கும் தேர்வை 9 லட்சம் பேர் எழுத உள்ள நிலையில் எப்படி ஒத்திவைக்க முடியும்? நாங்கள் இதில் தலையிட முடியாது – நீதிபதிகள் வினாத்தாள் கசிவு காரணமாக தேர்வை ஒத்தி வைக்க கோரி மனு.
நாடு முழுவதும் வரும் 21ம் தேதி நடைபெற உள்ள யுஜிசி நெட் தேர்வை ஒத்திவைக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

ஒன்பது லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை நடத்த உள்ளதால் அவர்களது எதிர்காலம் பாதிப்படையும் எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது ஏற்கனவே தேசிய தேர்வுகள் முகமை நடத்திய தேர்வுகள் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில் அதை குறையாக விசாரித்து முடித்த பிறகு தான் இந்த தேர்வை நடத்த வேண்டும் என மாணவர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது
யுஜிசி நெட் தேர்வு – கணினிவழியில் நடத்த முடிவு

ரத்து செய்யப்பட்ட யுஜிசி நெட் தேர்வு தேதி அறிவிப்பு; ஆக.21ஆம் தேதி முதல் செப்.4 ஆம் தேதி வரை நடைபெறும். ஏற்கெனவே நடைபெற்ற எழுத்துத் தேர்வு இம்முறை, கணினி வழியில் நடைபெறும். சிஐஎஸ்ஆர்-யுஜிசி நெட் தேர்வும் ஜூலை 25 முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறும். என்சிஈடி தேர்வு, ஜூலை 10 ஆம் தேதி நடைபெறும் – தேசியத் தேர்வு முகமை அறிவிப்பு.
யுஜிசி நெட் தேர்வு நடப்பதற்கு முன் வினாத்தாள் ரூ.6 லட்சத்துக்கு விற்பனை

புதுடெல்லி: கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணி மற்றும் ஆய்வுப் படிப்பு உதவித் தொகைக்கான தகுதியை தீர்மானிக்க யுஜிசி – நெட் தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்துகிறது. இந்தஆண்டு யுஜிசி – நெட் தேர்வு கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இத்தேர்வில் முறைகேடுகள் நடந்ததற்கான முகாந்திரம் இருப்பதாக தேசிய சைபர் கிரைம் அளித்த தகவலின் அடிப்படையில் மறுநாள் இத்தேர்வை மத்திய கல்வி அமைச்சகம் ரத்து செய்தது. மேலும் இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் […]
UGC NET தேர்வில் முறைகேடு அம்பலம்

வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் வகையில் தேர்வை ரத்து செய்வதாக அறிவிப்பு. ▪️ நேற்று முன்தினம் (ஜூன் 18) நாடு முழுவதும் நடைபெற்ற UGC NET தேர்வு ரத்து செய்யப்படுவதாக ஒன்றிய கல்வி அமைச்சகம் அறிவிப்பு. ▪️ தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தேசிய சைபர் குற்றப் பிரிவில் இருந்து தகவல் வந்ததையடுத்து நடவடிக்கை. ▪️ புதிய தேர்வுக்கான தேதி தனித் தனியாக பகிரப்படும் எனவும், இந்த முறைகேடுகள் குறித்த விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் எனவும் கல்வி […]